Bigil Vijay Corona Awareness Video; விஜய் நடிப்பில் வந்த பிகில் படத்திலேயே விஜய் கொரோனா விழிப்புணர்வு பற்றி நடித்து காட்டியுள்ளார். அதற்கான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிகில் படத்திலேயே விஜய் கொரோனா விழிப்புணர்வு வீடியோவில் நடித்துக் காட்டியுள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, விவேக், யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் பலர் நடிப்பில் கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் பிகில்.
பிகில் படத்தில் விஜய் ராயப்பன், மைக்கேல், பிகில் ஆகிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்று போஸ்டர் வெளியான போது அனைவரும் கூறி வந்தனர்.
ஆனால், படம் வெளியான பிறகுதான் ராயப்பன் மற்றும் மைக்கேல் ராயப்பன் (பிகில்) என்று இரு கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்பது தெரிய வருகிறது. அதுவும், அபபா, மகன் என்ற கதாபாத்திரம்.
இந்திய கால்பந்து அணிக்கு கேப்டனாக வரும் வாய்ப்பு கூட இருக்கும் விஜய்க்கு தேர்வுக்குழு அணியில் கூட அவரது பெயரை தேர்வு செய்யவில்லை.
அவர் பெயர் மட்டும் அல்ல, பிகில் அணியில் யாருடைய பெயரையும் தேர்வு செய்யவில்லை.
இதன் காரணமாக ராயப்பன் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் பெடரேசன கவுன்சில் தலைவரான ஜாக்கி ஷெரஃபை சந்தித்து பேசவருவார்.
அப்போது, பிகிலுக்கு எல்லாமே சரியாகத்தான் இருந்தது. ஆனால், பின்னணியை பரிசோதித்து பார்க்கும் போது உங்களது கிரிமினல் ரெக்கார்டு காரணமாக அமைந்துவிட்டது.
ஆதலால், தான் அவரது பெயரை தேர்வு செய்யவில்லை என்று ஜாக்கி ஷெராஃப் பேசுவார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், ராயப்பன், ஜாக்கி ஷெராஃப் கையை பிடித்துக் கொண்டு சார் என்னுடைய தொழிலுக்கும், அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பார்.
அப்போ நான் சொன்ன காரணம் பத்தவில்லை என்று அங்கிருந்து சென்று ஜாக்கி ஷெராஃப் சானிடைசர் பயன்படுத்தி கையை சுத்தம் செய்வார்.
பின்னர், கால்பந்து என்பது உங்களைப் பொறுத்தவரை வெறும் விளையாட்டு ஆனால், என்னைப் பொறுத்தவை இது ஒரு பிஸினஸ்.
ஒருவன் ஒருமுறை இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு விட்டால், அவன் தோற்றாலும், ஜெயித்தாலும் அவனுக்கு அரசு வேலை கண்டிப்பாக உண்டு என்று இருவரது உரையாடல் இருக்கும்.
இந்த நிலையில், ஜாக்கி ஷெராஃப் கையை பிடித்துக் கொண்டு ராயப்பன் பேசும் போது அவரிடம் இருந்து விலகிச் சென்ற ஜாக்கி ஷெராஃப் முதல் வேலையாக தனது கையை சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்வார்.
இதைத்தான் தற்போது நாட்டு மக்கள் அனைவரும் செய்து வருகின்றனர். ஆம், அடிக்கடி தங்களது கைகளை சோப் போட்டோ அல்லது சானிடைசர் பயன்படுத்தியோ சுத்தம் செய்து வருகின்றனர்.
நாட்டு மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுவரை சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள் என்று பலரும் கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளனர்.
ஆனால், விஜய் கொரோனா வைரஸ் குறித்து எந்த விழிப்புணர்வு வீடியோவும் வெளியிடவில்லை என்று விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில், பிகில் படத்தில் இடம்பெற்று ஒரு சிறிய வீடியோ ஒன்றே அதற்கு ஆதாரமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம், பிகில் படத்திலேயே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய அட்லீ ஒரு தீர்க்க தரிசியாக திகழ்கிறார்.