புதிய சாதனை படைத்த விஜய்யின் கில்லி: டிஆர்பியில் நம்பர் 1! விஜய் நடிப்பில் உருவான கில்லி படம் மீண்டும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு டிஆர்பியில் முதலிடம் பிடித்துள்ளது.
கில்லி படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் தரணி இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் ஆகியோரது நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு திரைக்குவந்த படம் கில்லி.
ஆக்ஷன் கதையை மையப்படுத்திய இந்தப் படம் திரைக்கு வந்து 200 நாட்களுக்கு மேல் ஓடியது. அதோடு, கில்லி விஜய்யின் சினிமா வரலாற்றில் முக்கியமான படமாக அமைந்தது.
கபடி, காதல் இரண்டுக்கும் முக்கியத்தும் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படம் திரைக்கு வந்து 16 ஆண்டுகள் ஆக இன்னும் 7 நாட்கள் உள்ளது.
இந்த நிலையில், கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், சினிமா பிரபலங்கள் முதல் அப்பாவி ஜனங்கள் வரை அனைவருமே வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், தொலைக்காட்சி சேனல்கள் தங்களது சேனல்களில் விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் நடித்த படங்களை அடுத்தடுத்து ஒளிபரப்பு செய்கின்றன. இதனால், டிஆர்பி ரேட்டிங்கும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், கடந்த 29 ஆம் தேதி தளபதி விஜய் நடித்த கில்லி படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதோடு எத்தனையோ முறை கில்லி படம் ஒளிபரப்பு செய்யப்பட்டுவிட்டது.
கில்லி படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆன நிலையில் சன் தொலைக்காட்சியில் எத்தனையோ முறை ஒளிபரப்பு செய்யப்பட்டு விட்டது. இதனால், சன் தொலைக்காட்சி 17.78 டிஆர்பி ரேட்டிங் Ghilli TRP Sun TV 17.78 TRP Points பெற்றுள்ளது.
ஆனால், ஒவ்வொரு முறையும் ஒளிபரப்பு செய்யப்படும் போது தொலைக்காட்சியின் டிஆர்பி என்னவோ அதிகரித்து வருகிறது.
ஆம், 13 ஆவது வாரத்தில் கில்லி படம் 17.78 டிஆர்பி ரேட்டிங் கொடுத்து விஜய் தான் டிஆர்பி கிங் என்று நிரூபித்துள்ளது.
இந்த ரேட்டிங்க் ஒரு புதிய படத்திற்கு கிடைக்கும் ரேட்டிங். ஆனால், விஜய் படைத்திற்கு அதுவும் கில்லிக்கு கிடைத்துள்ளது என்பது அவர் தான் டிஆர்பி கிங் என்பதை சுட்டிக்காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் புதிய படங்களை ஓரடங்கட்டி விஜய்யின் கில்லி படம் புதிய சாதனை படைத்துள்ளது.