Thalapathy Vijay; மாஸ்டரில் மீசையில்லாத விஜய்! மாஸ்டர் படத்தில் விஜய் மீசையில்லாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தற்போது புதிதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மாஸ்டரில் விஜய் மீசையில்லாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் மாஸ்டர். இந்தப் படத்தில், விஜய் உடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்துள்ளனர்.
விஜய் சேதுபதிக்கு தங்கையாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
கல்வித்துறையில் நடக்கும் ஊழலை மையப்படுத்தி மாஸ்டர் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். சமீபத்தில் விஜய்யின் கல்லூரி அடையாள அட்டை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
கடந்த 9 ஆம் தேதி வெளியாக இருந்த மாஸ்டர், கொரோனாவால் வெளியாகவில்லை. வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் 46 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாஸ்டரில் விஜய் மீசையில்லாமல் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. அதுவும் நாசர் தான் இந்தப் படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்துள்ளாராம். அவர் வில்லன்களால் கொலை செய்யப்படவே விஜய் மீசையில்லாமல் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் படம் வெளியான பிறகே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக ஒரு பாடலில் விஜய் தாடியில்லாமல், நடித்துள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால், மீசையில்லாத விஜய்யின் புகைப்படம் இதுவரை சமூக வலைதளங்களில் வெளியாகவில்லை.
இந்த நிலையில், மாஸ்டரில் மீசையில்லாத விஜய் என்ற ஹலோ ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.