Vijay Sethupathi; விஜய் சேதுபதியின் டுவிட்டரில் போலி பதிவு: வைரலாகும் டுவீட்! நடிகை ஜோதிகாவுக்கு ஆதரவாக விஜய் சேதுபதி பேசியதாக போலியான டுவிட் ஒன்று விஜய் சேதுபதியின் டுவிட்டர் அக்கவுண்டில் பதிவிடப்பட்டுள்ளது.
ஜோதிகாவுக்கு ஆதரவாக விஜய் சேதுபதி டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளதாக டுவிட்டர் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படும் நடிகர் விஜய் சேதுபதி. வருடத்திற்கு ஏராளமான படங்களில் நடித்து வெளியிட்டு வருகிறார்.
அதனால் என்னவோ, இவரைப் பற்றிய வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது. ஆம், சமீபத்தில் விஜய் சேதுபதி மதம் மாறிவிட்டார் என்று செய்திகள் பரவியது.
இதற்கு ஏற்பவே, மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில், மனிதனை மனிதன் தான் காப்பாற்ற முடியும். இது மனிதன் வாழ்வதற்கான இடம்.
மனிதன் சகோதரத்துடன் அன்பை பரிமாறிக் கொண்டு வாழ வேண்டும். மனிதனுக்கும், கடவுளுக்கும் இடையில் மதம் அவசியமில்லை. சாமி பல கோடி வருடங்களாக இங்கு இருக்கிறது.
ஆனால், சாமி இன்னும் சாமியை காப்பாற்றும் மகாமனிதனை இன்னும் படைக்கப்படவில்லை. சாமி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் என்று குறிப்பிட்டு பேசினார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஜோதிகா விருது விழாவில் கோவில்கள் பற்றி பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் மிகவும் அழகானது. உதய்பூர் அரண்மனை போல் அழகாக இருக்கும். இதற்கு முன் நான் பார்த்துள்ளேன்.
அங்கு போகாமல் இருக்காதீர்கள் என சிலர் கூறினர். ஆனால், கோவிலை பராமரிப்பதை போல், மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்பட வில்லை.
இங்குள்ள ஒரு மருத்துவமனையை பார்த்த போது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது. கோவிலுக்கு அவ்வளவு செலவு செய்கிறார்கள், பராமரிக்கிறார்கள்.
அதற்கு தரும் கவனம், உண்டியலில் போடும் பணத்தை போல் பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டடத்திற்கும் கொடுங்கள். அந்த மருத்துவமனையை பார்த்து விட்டு என்னால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்று பேசியிருந்தார்.
இதற்கு அப்போது சர்ச்சை எழுந்தது. மேலும், பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த இந்லையில், ஜோதிகாவுக்கு ஆதரவாக விஜய் சேதுபதி கருத்து தெரிவித்ததாக ஒரு போலியான டுவிட் உலா வருகிறது.
அதில், ஜோதிகா அவர்களின் துனிவான பேச்சுக்கு பாராட்டுக்கள். அவர்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் சக நடிகனாக முதல் ஆளாக இருப்பேன். மனிதனை மனிதன் தான் காப்பாற்ற முடியும். கடவுளால் வேடிக்கை பார்க்க தான் முடியும். கோவில்கள் மருத்துவமனையாக மாறும் காலம் நெருங்கிவிட்டது” என அதில் விஜய் சேதுபதி கூறியது போல குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அது Fake என விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.