Home சினிமா கோலிவுட் புஷ்பா படத்திலிருந்து விலகியது ஏன்? விஜய் சேதுபதி விளக்கம்!

புஷ்பா படத்திலிருந்து விலகியது ஏன்? விஜய் சேதுபதி விளக்கம்!

373
0
Pushpa

Pushpa Movie Vijay Sethupathi; புஷ்பா படத்திலிருந்து விலகியது ஏன்? விஜய் சேதுபதி விளக்கம்! அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்திலிருந்து விலகியது குறித்து நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் கொடுத்துள்ளார்.

புஷ்பா படத்திலிருந்து விலகியதற்கான காரணத்தை நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜூன் தற்போது புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் சுகுமார் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். அல்லு அர்ஜூன் இந்தப் படத்தில் லாரி டிரைவராக நடித்து வருகிறார்.

செம்மரம் கடத்தலை மையப்படுத்தி புஷ்பா படம் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

அண்மையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், கன்னட நடிகர் தனஞ்செயா நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், புஷ்பா படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அதற்கான காரணம் இதுவரை வெளியாகாமல் இருந்தது. தற்போது, இது குறித்து விஜய் சேதுபதி விளக்கம் கொடுத்துள்ளார்.

படத்தில் ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்னதாக சுகுமாரை சந்தித்து, கால்ஷீட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.

அதன் பிறகே படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழில் நிறைய படங்களில் நடித்து வருவதால், கால்ஷீட் பிரச்சனை வரக்கூடாது என்பதால், புஷ்பா படத்திலிருந்து விலகியுள்ளார்.

இதனை அவரே சமீபத்திய பேட்டியின் போது குறிப்பிட்டு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleNavarasa Web Series: முதல் முறையாக வெப் சீரிஸில் அறிமுகமாகும் சூர்யா!
Next articleசச்சின் 2 ஆம் பாகத்தை பார்க்க ஆசையாக இருக்கு: ஜான் மகேந்திரன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here