Home சினிமா கோலிவுட் சச்சின் 2 ஆம் பாகத்தை பார்க்க ஆசையாக இருக்கு: ஜான் மகேந்திரன்!

சச்சின் 2 ஆம் பாகத்தை பார்க்க ஆசையாக இருக்கு: ஜான் மகேந்திரன்!

272
0
Sachein 2

Sachein 2; விஜய்யின் சச்சின் 2 ஆம் பாகத்தை பார்க்க ஆசையாக இருக்கு: இயக்குநர் ஜான் மகேந்திரன்! தளபதி விஜய் நடிப்பில் வந்த சச்சின் படத்தின் 2 ஆம் பாகத்தை பார்ப்பதற்கு ஆசையாக இருக்கிறது என்று இயக்குநர் ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சச்சின் 2 படம் உருவாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்கு வந்த படம் சச்சின். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனீலியா நடித்திருந்தார்.

தமிழுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் சச்சின் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. விஜய் கல்லூரி மாணவராக கொஞ்சம் ஜாலியான டைப்பில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், சச்சின் 2 ஆம் பாகம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஜான் மகேந்திரன் கூறுகையில், விஜய்யின் சச்சின் படத்தை ரசிகர்கள் இப்போதும் விரும்புகிறார்கள்.

சச்சின் 2 ஆம் பாகத்தில் விஜய்யை பார்ப்பதற்கு எனக்கும் ஆர்வமாகவும், ஆசையாகவும் இருக்கிறது. அது நடந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனா காரணமாக இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் திறந்த பிறகு விரைவில், மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleபுஷ்பா படத்திலிருந்து விலகியது ஏன்? விஜய் சேதுபதி விளக்கம்!
Next articleபத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகளை நாளை வெளியிடப்படும்: CBSE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here