Home சினிமா கோலிவுட் அரசியலில் களமிறங்கிய விஜய் சேதுபதி: வைரலாகும் துக்ளக் தர்பார் புகைப்படங்கள்!

அரசியலில் களமிறங்கிய விஜய் சேதுபதி: வைரலாகும் துக்ளக் தர்பார் புகைப்படங்கள்!

0
432
Tughlaq Darbar Stills

Tughlaq Durbar Movie Stills; அரசியலில் களமிறங்கிய விஜய் சேதுபதி: வைரலாகும் துக்ளக் தர்பார் புகைப்படங்கள்! விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் துக்ளக் தர்பார் படத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

துக்ளக் தர்பார் படத்தின் விஜய் சேதுபதி அரசியல் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில், மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, புஷ்பா, யாதும் ஊரே யாவரும் கேளிர், க/பெ.ரணசிங்கம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துக்ளக் தர்பார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. கோவிந்த வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்து வருகிறார். மேலும், பார்த்திபன் இந்தப் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில், விஜய் சேதுபதி இருவிதமான சட்டை அணிந்து அமர்ந்திருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

அதில் ஒன்று தலைகீழாக தெரிகிறது. மேலும், விஜய் சேதுபதியின் தலைக்கு மேலே பட்டாம் பூச்சி பறப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது.

இதுஒருபுறம் இருக்க, துக்ளக் தர்பார் படத்தின் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், விஜய் சேதுபதி மற்றும் பார்த்தின் ஆகியோர் அரசியல் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.

இதுவரை விஜய் சேதுபதியை அரசியல் கெட்டப்பில் பார்க்காத ரசிகர்கள், விஜய் சேதுபதி அரசியல் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்களை கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here