Vijay Sethupathi Sindhubaadh; மகனுடன் நடித்த விஜய் சேதுபதியின் சிந்துபாத்: #1YearOfSindhubaadh! விஜய் சேதுபதி தனது மகன் சூர்யா உடன் இணைந்து நடித்த சிந்துபாத் படம் வெளியாகி இன்றுடன் 1 வருடம் ஆகியுள்ளது.
சிந்துபாத் படம் வெளியாகி ஒரு வருடத்தை கடந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டுள்ளார். ரசிகர்களுக்கு என்றும் மதிப்பு கொடுக்கக் கூடியவர். ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்து அன்பு காட்டக்கூடியவர்.
ரஜினிகாந்திற்கு வில்லனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். பேட்ட படத்தில், ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார். ரஜினியால் மகாநடிகன் என்றும் பாராட்டப்பட்டுள்ளார்.
இவரது நடிப்பில் வந்த நானும் ரௌடி தான், சேதுபதி, பேட்ட, சூப்பர் டீலகஸ் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. தற்போது மாஸ்டர் படத்தில், விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
அண்மையில், விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்த ஓ மை கடவுளே படம் வெளியானது. தற்போது கடைசி விவசாயி, உப்பென்னா, மாமனிதன், லாபம், க/பெ.ரணசிங்கம், யாதும் ஊரே யாவரும் கேளிர், புஷ்பா, லால் சிங் சத்தா, துக்ளக் தர்பார், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், விஜய் சேதுபதி நடிப்பில் வந்த சிந்துபாத் படம் திரைக்கு வந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகியுள்ளது.
இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி, விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஆகியோரது நடிப்பில் இந்தப் படம் கடந்த ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில், விஜய் சேதுபதி திருடனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களிடையே ஓரளவு விமர்சனம் பெற்ற இந்தப் படம் வசூல் ரீதியாகவும் போதுமான வரவேற்பு பெறவில்லை.
இந்த நிலையில், இந்தப் படம் வெளியாகி ஓராண்டு ஆன நிலையில், ஹலோவில், #1YearOfSindhubaadh என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.