Home சினிமா கோலிவுட் அஜித்தை விருமாண்டியாக்கிய ரசிகர்கள்: வைரலாகும் விருமாண்டி 2 போஸ்டர்!

அஜித்தை விருமாண்டியாக்கிய ரசிகர்கள்: வைரலாகும் விருமாண்டி 2 போஸ்டர்!

440
0
Virumandi 2 Thala Ajith Version

அஜித்தை விருமாண்டியாக்கிய ரசிகர்கள்: வைரலாகும் விருமாண்டி 2 போஸ்டர்! தல அஜித்தை விரும்பாண்டி 2 கெட்டப்பில் இருப்பது போன்று ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித்தை விருமாண்டியாக்கி உருவாக்கப்பட்ட விருமாண்டி 2 போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

தமிழ் சினிமாவில் தனது விடா முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றின் மூலம் முன்னேறியவர் தல அஜித். ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துவிட்டு, அவரது வேலையை மட்டும் பார்த்து வருகிறார்.

அவர் உண்டு அவரது வேலை உண்டு என்று இருப்பவர். எப்போதும் ரசிகர்களை மதிக்கும் நடிகர் என்றால், தல அஜித். ரசிகர்கள் விரும்பினால், செல்ஃபி எடுத்து கொள்ளவும் தயங்கமாட்டார்.

இவரது நடிப்பில் கடந்த ஆண்டு விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ஹிட் படங்களாக அமைந்தன.

இந்தப் படங்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அஜித் தனது 60 ஆவது படமான தல60 படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்திற்கு வலிமை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஹெச் வினோத் தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அஜித் விருமாண்டி 2 கெட்டப்பில் இருப்பது போன்று போஸ்டர் ஒன்றை ரசிகர்கள் உருவாக்கி அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு கமல் ஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்து வெளியான படம் தான் விருமாண்டி.

ஆக்‌ஷன் டிராமா கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் பசுபதி, அபிராமி, நெப்போலியன், நாசர் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் சண்டியர் என்று கமல் ஹாசன் அழைக்கப்பட்டார். இந்தப் படத்தின் 2 ஆம் பாகம் உருவாக இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. அதில், தல அஜித்தை நடிக்க வைத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து, அஜித் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

விருமாண்டி 2 அஜித் வெர்ஷனில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஆடி மாத தரிசனம் 3: சிவனை தலையில் சூடிய அம்பிகை! கோடி வளம் தருவாள் கோடியம்மன்!
Next articleதமிழக அரசியலை சாடிய மீரா மிதுனின் அடுத்த டார்க்கெட் திமுக?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here