Home சினிமா கோலிவுட் 49 வீட்ல திருடிய கும்பல்: வலைவீசி தேடும் விஷால்: சக்ரா டிரைலர் வெளியீடு!

49 வீட்ல திருடிய கும்பல்: வலைவீசி தேடும் விஷால்: சக்ரா டிரைலர் வெளியீடு!

321
0
Chakra Trailer Released

Chakra Trailer; 49 வீட்ல திருடிய கும்பல்: வலைவீசி தேடும் விஷால்: சக்ரா டிரைலர் வெளியீடு! விஷால் நடிப்பில் உருவாகி வரும் சக்ரா படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஷாலின் சக்ரா படத்தின் டிரைலரை ஆர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

சக்ரா டிரைலர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். ஒரு நடிகரைத் தொடர்ந்து தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இதற்காக விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மேலும், ஒரு இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

ஆம், துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வருகிறார். விரைவில், இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. தற்போது விஷால், சக்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

எம்.எஸ். ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில், விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும், ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

கே.ஆர்.விஜயாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். விஷால், ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. பொதுவாக விஷால் படம் தெலுங்கில் மட்டும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும்.

தற்போது சக்ரா படம் 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், சக்ரா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

தமிழில் சக்ரா டிரைலரை கார்த்தி மற்றும் ஆர்யாவும், மலையாள டிரைலரை மோகன்லாலும், தெலுங்கு டிரைலரை ராணாவும், கன்னட டிரைலரை யாஷூம் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சக்ரா டிரைலரில், அடையாறு பகுதியில் 7 வீட்டில் கொள்ளை நடந்துள்ளது. பெசண்ட் நகர் பகுதியில் 13 வீட்டில் கொள்ளை நடந்துள்ளது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, 49 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த சென்னை அலறிக்கொண்டிருக்கிறது.

மற்ற வீடுகளில் கொள்ளையடித்தது கூட பரவாயில்லை. ஆனால், குறிப்பிட்ட இந்த வீட்டில் இருந்த ராணுவத்தில் கொடுக்கப்படும் மிகப்பெரிய விருதான அசோக சக்ராவையே கொள்ளையடித்துச் சென்ற கொள்ளை கும்பலை தேடி வரும் விஷாலின் கதைதான் சக்ரா.

இதில், ஸ்ரத்தா ஸ்ரீநாத் போலீஸ் அதிகாரியாகவும், விஷால் இராணுவ அதிகாரியாகவும் நடித்துள்ளனர். கண்ணுக்கு தெரியாத வைரஸ் மட்டுமல்ல, வயர்லெஸ் நெட்வொர்க்கும் ஆபத்தானது தான்.

டிஜிட்டல் இந்தியாவுக்கு வரவேற்கிறோம். Coming Soon என்று சக்ரா டிரைலர் முடிக்கப்பட்டுள்ளது.

 

Previous articleலிப் டூ லிப் கிஸ் உடன் களைகட்டிய திருமணம்: கிறிஸ்துவ முறைப்படி நடந்த வனிதா மேரேஜ்!
Next articleதனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்த இ. வேல்முருகன் கொரோனா பாதிப்பால் இறந்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here