Home சினிமா கோலிவுட் சக்ரா டிரைலர்: வைரஸை விட வயர்லெஸ் நெட்வொர்க் ஆபத்தானது!

சக்ரா டிரைலர்: வைரஸை விட வயர்லெஸ் நெட்வொர்க் ஆபத்தானது!

330
0
Chakra Movie Trailer

Chakra Trailer; சக்ரா டிரைலர்: கண்ணுக்கு தெரியாத வைரஸை விட வயர்லெஸ் நெட்வொர்க் ஆபத்தானது! விஷால் நடிப்பில் உருவாகி வரும் சக்ரா டிரைலர் வெளியாகியுள்ளது.

விஷாலின் சக்ரா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் எம்.எஸ். ஆனந்த் இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் சக்ரா. இந்தப் படத்தில், விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும், ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

கே.ஆர்.விஜயாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். விஷால், ராணுவ அதிகாரியாகவும், ஸ்ரத்தா ஸ்ரீநாத் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

இந்த நிலையில், சக்ரா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை கார்த்தி மற்றும் ஆர்யா இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

சக்ரா டிரைலரில் கூறியிருப்பதாவது: மற்றொரு ஆயுதத்தைப் பயன்படுத்தி வங்கியில் கொள்ளையடிக்கும் வங்கி கொள்ளையரை விட சைபர் ஹேக்கர் ஒன்றுமில்லை.

அவர்களது முயற்சி திருட்டு மற்றும் கொள்ளை. சுதந்திர தினம் என்று கூட பார்க்காமல் சென்னையைச் சுற்றிலும் 49 வீடுகளில் மர்ம கும்பல் தங்களது கைவரிசையை காட்டி கொள்ளையடித்துள்ளனர்.

அதில், ஒருவீடு ராணுவ அதிகாரி நாசரின் வீடு, அவரது வீட்டில் இருந்த அசோக சக்ரா விருதை மர்ப கும்பல் கொள்ளையடித்து சென்றுவிடுகிறது.

மற்ற வீடுகளில் கொள்ளையடித்த கும்பலை போலீஸ் அதிகாரி ஸ்ரத்தா ஸ்ரீநாத் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.

ராணுவ அதிகாரி வீடு என்பதால், அந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருட்டு கும்பலை பிடிக்கும் விஷால் படையெடுக்கிறார்.

ஒரு நாட்டையே அச்சுறுத்தும் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை கண்டுபிடிக்க ஒரு தேசிய பாதுகாப்பு குழு செய்யும் ஆராய்ச்சியை விட, ஒரு சராசரி மனிதனின் தேவைகளையும், அவனது ஆசைகளையும் கண்டுபிடிப்பதற்கு ஒரு கார்ப்பரேட் கம்பெனி செய்யும் ஆராய்ச்சி தான் அதிகமா?

நிச்சயமாக நாம் தேடிக்கொண்டிருக்கும் கிரிமினல் நமது கண்ணுக்கே தெரியமாட்டான். இப்போது தான் சீண்டி விட்டிருக்கிறேன். இந்த கேம் பிகின்ஸ் நவ்.

இறுதியாக, கண்ணுக்கு தெரியாத வைரஸ் மட்டுமல்ல, வைரஸ் நெட்வொர்க்கும் ஆபத்தானது தான் என்று தேடப்படும் கிரிமினல் கூறுவது போன்று இந்த சக்ரா டிரைலர் முடிகிறது.

படத்தில், நாசரின் மகனாக விஷால் நடித்திருப்பார் என்று தெரிகிறது. நாசரின் இறப்புக்குப் பிறகு அவரது வேலையில் விஷால் சேர்கிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் சக்ரா படம்.

இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleசாத்தாங்குளம் தந்தை மகன் இறப்பு சம்பவம் இந்திய அளவில் சமூக வளைதளங்களில் ட்ரெண்டிங் #JusticeForJayarajanandBennicks
Next articleலிப் லாக் முத்தம் கொடுத்த வனிதா பீட்டர் பால்: வைரலாகும் திருமண புகைப்படங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here