Home சினிமா கோலிவுட் விஷால் ஓடி ஒளியுற ஆள் இல்லை: தேடி உதவி செய்யுற ஆளு!

விஷால் ஓடி ஒளியுற ஆள் இல்லை: தேடி உதவி செய்யுற ஆளு!

591
0
Vishal Donation

Vishal Donation; விஷால் ஓடி ஒளியுற ஆள் இல்லை: தேடி உதவி செய்யுற ஆளு! கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் விஷால், ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கியுள்ளார்.

ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை விஷால் Vishal Donation நடிகர் சங்க உறுப்பினர்கள் 1500 பேர் மற்றும் 300 திருநங்கைகளுக்கு வழங்கியுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் சினிமா பிரபலங்கள் பொருளுதவி, நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அஜித், விஷால், விஜய், சிம்பு என்று பலரும் உதவி செய்யவில்லை விமர்சனம் எழுந்தது.

அதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் அஜித் 1.25 கோடி வரையில் நிதியுதவி வழங்கினார்.

Vishal Donation Nadigar Sangam

அந்த வகையில், தற்போது விஷாலும் உதவி செய்துள்ளார். ஆம், சென்னையைச் சேர்ந்த 1500 நடிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் 300 திருநங்கைகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை கொடுத்து உதவினார்.

அதை இன்று நடிகர் ஶ்ரீமன் மற்றும் தளபதி தினேஷ் அனைவருக்கும் வழங்கினார்கள். வெளியூர் உறுப்பினர்களுக்கும் மளிகைப் பொருட்கள் வழங்குவதற்க்கான ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

தொற்று நோய் தடுப்பதற்கான கை உறை, முகக்கவசம் ஆகியவை துப்புரவு தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்த ஏற்பாடுகளை விஷால் ரசிகர் மன்ற செயலாளர் ஹரி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here