Vishal Covid 19; கொரோனாவா உண்மை தான்: மீண்டு வந்தது குறித்து விஷால் டுவீட்! கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விஷால் அதிலிருந்து மீண்டு வந்தது குறித்து டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தது எப்படி என்று நடிகர் விஷால் டுவிட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார்.
உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராதயா, அபிஷேக் பச்சன், விஷால், அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா, துருவா சார்ஜா என்று பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விஷாலும், அவரது தந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளனர்.
இது குறித்து விஷால் கூறுகையில், எனது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது உண்மை தான். தமக்கும் அதிக சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டது. எனது மேலாளருக்கும் இதே நிலை தான் இருந்தது.
மூன்று பேருமே ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டதால், ஒரு வாரத்திற்குள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டோம். தற்போது நலமாக இருக்கிறோம்.
மேலும், இந்த தகவலை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று விஷால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Message please..