Vishnu Vishal Next; ரசிகர்களிடம் கருத்து கேட்ட பிறகு அறிவிப்பு வெளியிட்ட விஷ்ணு விஷால்! விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் டீசர் குறித்து இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிப்பு வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் டீசர் குறித்து அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருக்கிறது.
விஷ்ணு விஷால் நடிப்பில் எஃப்.ஐ.ஆர், இன்று நேற்று நாளை 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து உருவாகி வருகிறது.
இந்த நிலையில், விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி, அடுத்த படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தனது புதிய படத்தை ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்க இருந்தது. ஆனால், வாழ்க்கை வேறு வேறு திட்டங்களை வகுத்துள்ளது.
அதே தினத்தில் சில நேர்மறை எண்ணத்துடன் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அதற்கு முன்னதாக நான் இது போன்று பகிர்ந்து கொள்ளலாமா? வேண்டாமா? என்பது குறித்து உங்களது ஆலோசனை வேண்டும் என்று கேட்டிருந்தார்.
இதற்கு ரசிகர்கள் பலரும், சினிமா விமர்சகர்கள் பலரும் ஓகே சொல்லியதைத் தொடர்ந்து இன்று மாலை 4.30 மணிக்கு டைட்டில் அறிவிப்பு டீசரனை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதோடு, போஸ்டர் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அந்தப் போஸ்டரை பார்க்கும் பொழுது ஆக்ஷன், த்ரில்லர் படமாகவும், இதற்கு முன்னதாக வந்த ராட்சசன் படத்தை போன்றும் இந்தப் படம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக #VishnuVishalsNEXT என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.