Home சினிமா கோலிவுட் உடலுக்கு மிளகு ரசம்; உயிருக்கு முகக் கவசம்….ரைமிங்கா விவேக் கொரோனா ஐடியா!

உடலுக்கு மிளகு ரசம்; உயிருக்கு முகக் கவசம்….ரைமிங்கா விவேக் கொரோனா ஐடியா!

245
0
Vivek Corona Idea

உடலுக்கு மிளகு ரசம்; உயிருக்கு முகக் கவசம்….ரைமிங்கா விவேக் கொரோனா ஐடியா! காமெடி நடிகர் விவேக் கொரோனா அறிவுரை வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

காமெடி நடிகர் விவேக் கொரோனா ஐடியா வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா பீதியில் அனைத்து உலக நாடுகளும் என்ன செய்வது என்று தவித்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளையும் தாண்டி கொரோனா எப்படியோ இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எப்படியோ ஊரடங்கு உத்தரவு என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டதால் என்னவோ அவ்வளவு ஒன்றும் பாதிப்பில்லை என்று கூறப்படுகிறது. எனினும், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கத்தான் செய்கிறது.

இந்த நிலையில், காமெடி நடிகர் விவேக் கொரோனா ஐடியா என்று புதுவிதமாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

கிட்டத்தட்ட 25 நாட்களாக் நாம் லாக்டவுனில் இருந்திருக்கிறோம். இன்னும் கொஞ்ச நாட்கள் இருக்கப்போகிறோம். இவ்வளவு நாட்கள் இருந்தது முக்கியமில்லை. இனி வரும் நாட்களில் எப்படி இருக்கப் போகிறோம் என்பதுதான் முக்கியம்.

காரணம், மற்ற நாட்களுடன் ஒப்பிடுகையில், 130 கோடி மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்று என்பது, மிகவும் குறைவு.

அதற்கு காரணம், முழு ஊரடங்கை கடைபிடித்ததால்தான். ஆகையில், அரசு கூறிய வழிமுறைகளின் படி நாம் ஓரளவு பின்பற்றி நடந்து கொண்டுள்ளோம் என்பதுதான் இந்த குறைவான தொற்று.

இதை இன்னமும் குறைந்து முற்றிலும் இதிலிருந்து வெளியில் வருவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அடுத்து இருக்கப்போகிற 20 நாட்கள் நாம் கண்டிப்பாக முகக்கவசம், அணிய வேண்டும். வாய் மற்றும் மூக்கு இரண்டையும் மூடியிருக்கும்படியான முக்கவசத்தை அணிய வேண்டும்.

அப்போ கண்ணிற்கு பாதிப்பு வராதா என்று கேட்டால்? அப்படியில்லை. அது வெறும் வெண்படமாக (conjunctivities) இருந்துவிட்டு போய்விடும். ஆதலால் அது ஆபத்தில்லை. மிகவும் முக்கியமானது மூக்கு மற்றும் வாய் இரண்டையும் முகக்கவசத்தால் மூடிக் கொள்ள வேண்டும்.

வீட்டை விட்டு வெளியில் செல்லும் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.

இரண்டு சம் மிகவும் முக்கியம். சாப்பாட்டுக்கு மிளகு ரசம். முகத்துக்கு முகக் கவசம். இரண்டும் இருந்தால் வாழ்க்கை ஆசம் (awesome) என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleவிக்ரமுக்காக சர்ப்ரைஸ் வீடியோ வெளியிட்ட கோப்ரா படக்குழு!
Next articleவீட்டுக்குள்ளேயே இப்படி செய்யும் பிக் பாஸ் ரைசா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here