Vivek; விவேக்கின் இசை திறமை: ஆர்மோனியம் வாசித்து தனிமையில் இனிமை காணும் விவேக்! நடிகர் விவேக் ஆர்மோனியம் வாசிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது.
விவேக் ஆர்மோனியம் வாசிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி, சமையல் செய்வது, வீட்டை சுத்தம் செய்வது, டான்ஸ் ஆடுவது, ஓவியம் வரைவது, பாடல் பாடுவது, இசை சாதனங்களை வாசிப்பது என்று பிஸியாக இருக்கின்றனர்.
சிலர், தங்களது ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். அந்த வகையில், காமெடி நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆர்மோனியம் வாசிக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி என்ற பாடலுக்கு ஆர்மோனியம் வாசித்து அசத்தியுள்ளார்.
இதற்கு முன்னதாக சைக்கோ படத்தில் வரும் உன்ன நெனச்சு நெனச்சு உருகிப் போனேன் மெழுகா என்ற பாடலுக்கு ஆர்மோனியம் வாசித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், விவேக் ஆர்மோனியம் வாசிக்கும் வீடியோவை சிலர் ஹலோவில் பதிவிட்டு விவேக்கின் இசை திறமை என்ற ஹேஷ்டேக்கில் வைரலாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டிலேயே முடங்கி தனியாக இருப்பது என்பது கொடுமையிலும் கொடுமை. அந்த கொடுமையிலும் இசை சேர்ந்தால் அது இனிமையிலும் இனிமை என்று பலருக்கும் புரிய வைத்துள்ளார்.
விவேக்கின் ஆர்மோனியம் வாசிக்கும் வீடியோவை பதிவிட்ட கயல் தேவராஜின் டுவிட்டை ரீடுவீட் செய்த விவேக், அதில் உண்மைதான், எம்எஸ்வி, இளையராஜா, ஏஆர் ரஹ்மான் இவர்கள் இல்லாவிட்டால் நம் தனிமை, நம் பயணம்?? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக பல்லடம் பகுதியில் குப்பைகளை சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளர்களுக்கு சிலர் பாத பூஜை செய்து, அவருக்கு பணமாலை போட்டு வரவேற்ற வீடியோவை விவேக் தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.