Home சினிமா கோலிவுட் ஊரடங்கு முடியும் வரை டுவிட்டருக்கு டாட்டா காட்டிய விவேக்!

ஊரடங்கு முடியும் வரை டுவிட்டருக்கு டாட்டா காட்டிய விவேக்!

352
0
Vivek Twitter

டுவிட்டருக்கு டாட்டா காட்டிய விவேக்! ஊரடங்கு முடியும் வரை டுவிட்டரிலிருந்து விலகுவதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

லாக்டவுன் முடியும் வரை டுவிட்டரிலிருந்து விலகுவதாக விவேக் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக வரும் மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கியிருக்கின்றனர். வீட்டில் இருந்தபடி கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நகைச்சுவை நடிகர் விவேக் தொடர்ந்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகிறார்.

தற்போது கடைபிடிக்கப்படும் முழு ஊரடங்கு குறித்து பேசியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

இந்த ஊரடங்கு ஏன் தொடர்ச்சியாக போய்க்கொண்டே இருக்கிறது என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

எப்போது தமிழக அரசு மற்றும் இந்திய அரசு சொல்வதை ஒழுங்காக கடைப்பிடிக்கிறோமோ அன்றைக்குதான் நம்மால் வெளியே வர முடியும்.

அதனால்தான் இந்த ஊரடங்கு தொடர்கிறது. நமக்கு தொற்று எண்ணிக்கை குறைந்து பூஜ்ஜியம் என வர வேண்டும். அப்போதுதான் நாம் முழுமையாக வெளியே வந்திருக்கிறோம் என்று அர்த்தம்.

அப்போதுதான் நாமும் வெளியே வருவதற்கு அரசு உதவி செய்யும். முழுமையான ஊரடங்கை கடைப்பிடிக்கத் தவறிய காரணத்தால்தான், இந்த ஊரடங்கு தொடர்கிறது.

எங்கு போனாலும் பைக்கில் நிறைய நண்பர்களுடன் பயணிப்பது, பயங்கரக் கூட்டத்தில் போய் காய்கறிகள் வாங்குவது ஆகியவற்றை தினமும் காணொலியில் பார்க்கிறோம்.

இப்படியிருக்கும் போது எப்படி நம்மால் ஊரடங்கை நிறுத்த முடியும். மக்களே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

முழுமையான ஊரடங்கை பின்பற்றி எப்படியாவது இந்த தொற்று குறைந்து, தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை பூஜ்ஜியம் என்ற நிலை வரும் போதுதான் நாம் வெளியே வர முடியும்.

இனிமேலாவது விழித்துக் கொண்டு தனிமையில் இருக்கவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும்.

சிங்கப்பூரில் உள்ள ஆய்வின்படி, மே மாத இறுதியில் உலகத்துக்கே கொரோனாவிலிருந்து விடிவு கிடைக்கலாம் என்று சொல்கிறார்கள்.

அதேபோல் நமக்கு சீக்கிரம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. நாம் தமிழக அரசுடன், இந்திய அரசுடன் ஒத்துழைப்போம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleஇந்தியாவில் 1,897 புதிய covid-19 தொற்றுகள்,  73 இறப்புகள்
Next articleசூப்பரான கிளைமேட்டில் அழகான தேவை: வீடியோ வெளியிட்ட அதுல்யா ரவி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here