Home சினிமா கோலிவுட் சாணியில அந்தர் பல்டி அடித்த விஜே மணிமேகலை!

சாணியில அந்தர் பல்டி அடித்த விஜே மணிமேகலை!

324
0
VJ Manimegalai

சாணியில அந்தர் பல்டி அடித்த விஜே மணிமேகலை! இது கூட தெரியாமல் விஜே மணிமேகலை சாணியில் அந்தர் பல்டி அடித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜே மணிமேகலை சாணியில் உருண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சன் மியூசிக் டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட்ஸ் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக புகழ் பெற்றவர் விஜே மணிமேகலை.

தொடர்ந்து 7 ஆண்டுகள் சன் மியூசிக் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவே வலம் வந்தார்.

அதன் பிறகு சன் டிவி, சன் நியூஸ் சேனல்களிலும் நட்சத்திர தொகுப்பாளினியாக வலம் வந்தார். அண்மையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார்.

அதைவிட வீட்டில் குக்கரை வெடிக்கச் செய்து பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியவர் என்ற பெருமையையும் பெற்றவர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் இவருக்கு சமையல் சுட்டுப்போட்டாலும் வரவில்லை.

இந்த நிலையில் ஒருவாரம் கிராமத்திற்கு சென்று வரலாம் என்று திட்டம் போட்டு திருப்பூர் அருகிலுள்ள கிராமத்திற்கு சென்றுள்ளார் மணிமேகலை.

அங்கு சென்ற பிறகுதான் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், கிராமத்திலேயே தங்க வேண்டிய சூழலில் மணிமேகலையும், அவரது கணவர் ஹூசையும் மாட்டிக்கொண்டனர்.

என்னதான் கிராமத்தில் மாட்டிக்கொண்டாலும் அவர்களுக்கு பொழுது போவதற்கு ஏகப்பட்ட விளையாட்டுகளை கிராமத்தினர் சொல்லிக் கொடுக்கின்றனர்.

அந்த வகையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்றாடம் கிராமத்தில் நடக்கும் விளையாட்டுகள், அலப்பறைகள் என்று ஒவ்வொனறையும் வீடியோவாக பகிர்ந்து வருகிறார்.

அப்படி பகிர்ந்த் வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணிமேகலை, தனது தோழியுடன் ஒரு க்யூட் கேம் விளையாடியுள்ளார். அந்த கேமில், விளையாடிக்கொண்டிருந்த போது மணிமேகலை எதிர்பாராத விதமாக சாணியில் விழுந்துள்ளார்.

இதைக் கண்ட கிராமத்தினரும், மணிமேகலையின் நண்பர்களும் சிரிப்பாய் சிரிக்கின்றனர்.

இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள மணிமேகலை கூறியிருப்பதாவது: என்னவொரு வில்லத்தனம், இவ்ளோ நாள் நல்ல பிள்ளைங்கள மாதிரி இருந்துட்டு… இப்போது என்னையே ஏமாத்துறாங்க இந்த சிறுவண்டு பசங்க. சாணியில தள்ளிவிட்டதுக்கு அடுத்த விளையாட்டுல பழி வாங்கனும்.

இதுதான் என்னோட சின்னவயசு ஃபேவரேட் கேம். கோபி பைஸ் கோகனா பைஸ்… ஆனால், நான் கீழ விழுந்தது பத்திகூட கவலைப்படாம சாணிக்கு குளோஸப் வச்சப் பாத்தியா டேய்! ஹுசைன் உனக்கு இருக்குடா என்று பதிவிட்டுள்ளார்.

மணிமேகலையின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleCup முக்கியம் பிகிலு: விஜய்யை கிண்டலடித்த ப்ரியா பவானி சங்கர்!
Next articleபிரபலங்களின் லாக்டவுன் சேலஞ்ச்: வைரலாகும் வீடியோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here