Home சினிமா கோலிவுட் பிரபலங்களின் லாக்டவுன் சேலஞ்ச்: வைரலாகும் வீடியோ!

பிரபலங்களின் லாக்டவுன் சேலஞ்ச்: வைரலாகும் வீடியோ!

499
0
Lockdown Challenges

Lockdown Challenges; பிரபலங்களின் லாக்டவுன் சேலஞ்ச்: வைரலாகும் வீடியோ! லாக்டவுன் நேரத்தில் வீட்டில் சும்மா இருக்க முடியாமல் சினிமா பிரபலங்கள் பலரும் சேலஞ்ச் என்ற பெயரில் புது புது வீடியோ வெளியிட்டுள்ளனர்.

பிரபலங்களின் லாக்டவுன் சேலஞ்ச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாடே கொரோனா பீதியில் இருக்கிறது. ஆனால், இவங்களுக்கு மட்டும் ஜாலி. ஆமாங்க, எப்போதுமே பிஸியாக இருந்து வந்த சினிமா பிரபலங்கள் தற்போது ஜாலியாக வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஒவ்வொரு நாளும் வீட்டில் என்ன செய்கிறோம், எப்படியெல்லாம் அன்றைய பொழுதை கழிக்கிறோம் என்று வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

வீட்டு வேலைகள், தோட்ட வேலை, உடற்பயிற்சி, யோகா, சமையல், துணி துவைப்பது, விளையாடுவது என்று பிஸியாக இருக்கின்றனர்.

இந்த நிலையில், பிரபலங்கள் பலரும் லாக்டவுன் சேலஞ்ச் என்ற பெயரில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அவர்கள்கில் சஞ்சனா சிங், மகத், நயன்தாரா, த்ரிஷா ஆகியோர் இந்த சேலஞ்ச்சில் ஈடுபட்டுள்ளனர்.

சஞ்சனா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தலைகீழா இருந்து டீ சர்ட்டை அணிய வேண்டும். இதுதான் அந்த சேலஞ்ச்.

இதே போன்று, Hand Gesture Challenge க்கு த்ரிஷா, நயன்தாரா ஆகியோர் வீடியோ வெளியிட்டுள்ளனர். வாட்ஸ் அப்பில் நிறைய ஸ்மைலி இருக்கும்.

அதுக்கு கீழாக நிறைய ஹேண்ட் ஹெஸ்ட்சர் இருக்கும். வீடியோ தொடங்கியதும், ஹேண்ட் ஹெஸ்ட்சர் ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கும். அதைப் பார்த்து நாமும் சரியான ஹேண்ட் ஹெஸ்ட்சர் காண்பிக்க வேண்டும். இதுதான் அந்த சேலஞ்ச்.

அதன் பிறகு Dalgona Coffee Challenge. வீட்டில் இருந்தபடியே காஃபி தயாரிக்கும் சேலஞ்ச் இது. இதனை ஐஸ்வர்யா ராஜேஷ் செய்துள்ளார்.

இறுதியாக Flip the Switch Challenge வீடியோ. ரெண்டு பேரு வீடியோவில் இருக்கலாம். ஒருவர் போனை பிடித்துக்கொண்டு பண்ணிக்கிட்டு வீடியோ எடுக்க வேண்டும். மற்றொருவர் அவருக்கு அருகிலோ அல்லது தலையிலோ உட்கார்ந்து ஏதாவது டான்ஸ் ஸ்டெப் போடுவது போன்றோ அல்லது தலையை நோண்டுவது போன்றும் செய்ய வேண்டும்.

சிறிது நேரத்திற்கு பிறகு ஸ்விட்ச் ஆப் செய்து விட வேண்டும். அதன் பிறகு ஸ்விட்ச் ஆன் செய்து பார்த்த போது அந்த கேரக்டர் அப்படியே ஸ்வேப் ஆகியிருக்கும்.

அருகில் இருந்தவர் வீடியோ எடுக்க வேண்டும். வீடியோ எடுத்தவர் அருகிலோ அல்லது மடியிலோ அல்லது தலை மீதோ அமர்ந்து சில்மிஷம் செய்ய வேண்டும். இந்த சேலஞ்சை மகத் செய்துள்ளார்.

இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleசாணியில அந்தர் பல்டி அடித்த விஜே மணிமேகலை!
Next articleராகவா லாரன்ஸ் திட்டத்தில் மண்ணு அள்ளிப்போட்ட அரசுக்கு கோரிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here