Home சினிமா கோலிவுட் சிம்புவின் வருங்கால மனைவிக்காக காத்திருக்கிறோம்: பிந்து மாதவி!

சிம்புவின் வருங்கால மனைவிக்காக காத்திருக்கிறோம்: பிந்து மாதவி!

362
0
Bindu Madhavi

Simbu Future Wife; சிம்புவின் வருங்கால மனைவிக்காக காத்திருக்கிறோம்: பிந்து மாதவி! சிம்புவின் வருங்கால மனைவியை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறோம் என்று நடிகை பிந்து மாதவி தெரிவித்துள்ளார்.

பிந்து மாதவி, சிம்புவின் வருங்கால மனைவியை பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பிந்து மாதவி. கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், வருத்தப்படாத வாலிபர் சங்கம், பசங்க 2 என்று பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது மாயன் மற்றும் யாருக்கும் அஞ்சேல் என்ற படத்தில் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கியிருக்கும் பிரபலங்களில் பிந்து மாதவி தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, சிம்பு சமையல் செய்யும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

அதில், வீட்டிற்கு வரும் பெண்களை வேலைக்காரி போன்று நடத்தக் கூடாது என்றும், அவர்கள் விரும்பினால் சமையல் செய்யலாம் என்றும், கூறியிருந்தார்.

மேலும், என் வருங்கால மனைவி எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பேனே தவிர உங்களை மாதிரி வீட்டு வேலை செய்து வேலைக்காரி போன்று இருக்க விடமாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

இந்த வீடியோவை பதிவிட்டு நடிகை பிந்து மாதவி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், சரியான கொள்கை சிம்பு. நாங்கள் அனைவரும் அந்தப் பெண்ணை சந்திக்க காத்திருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

SOURCER SIVAKUMAR
Previous articleஎதிர்ப்புகளையும் தாண்டி டிஜிட்டலில் வெளியாகும் பொன்மகள் வந்தாள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Next articleகும்புட போன தெய்வம் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சாயா சிங் பர்த்டே டுடே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here