Home சினிமா கோலிவுட் டுவிட்டரில் டிரெண்டாகும் #விளக்கு_ஏற்ற_மாட்டோம் ஹேஷ்டேக்!

டுவிட்டரில் டிரெண்டாகும் #விளக்கு_ஏற்ற_மாட்டோம் ஹேஷ்டேக்!

309
0
Lights For Life

Corona, Light For Life; டுவிட்டரில் டிரெண்டாகும் விளக்கு ஏற்ற மாட்டோம் ஹேஷ்டேக்! பிரதமர் மோடி அறிவுறுத்தியதற்கு எதிராக விளக்கு ஏற்ற மாட்டோம் என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

#விளக்கு_ஏற்ற_மாட்டோம் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

உலகத்தையே நடு நடுங்க வைத்தது கொரோனா வைரஸ். இந்தியாவில் மட்டும் 77 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மேலும், 3030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது மேலும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு ஒரு புறம் ஏற்பட்டுள்ளது. ஒரு புறம் இத்தனை நாட்கள் எப்படியோ தாக்குப்பிடித்துவிட்டோம் என்று பெருமைப்படும் நிலையும் வந்துவிட்டது.

இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக எத்தனையோ பேரது வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பலரும் வேலை இழந்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள் என்று பலரும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனாவுக்கு எதிராக பிரதமர் மோடி ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள அனைத்து லைட்டுகளையும் ஆப் செய்துவிட்டு (Lights For Life), மெழுதுவர்த்தி, விளக்கு ஏற்றுதல், செல்போன் டார்ச், டார்ச்லைட் ஒளிரச் செய்ய வேண்டும் (Rays Of Hope) என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.

இந்த நிலையில், அதற்கான நேரமும் வந்துவிட்டது. அப்படியிருக்கும் போது டுவிட்டரில் #விளக்கு_ஏற்ற_மாட்டோம் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதை வைத்து பலரும் மீம்ஸ் உருவாக்கி டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

மின் விளக்குகளை மட்டுமே அணைக்க வேண்டும். இதர மின்சார சாதனங்களை அணைக்க வேண்டாம் என்று மின்வாரியம் கேட்டுக்கொண்டிருந்தது.

கடந்த 1992 ஆம் ஆண்டிலேயே அனைத்து கிராமங்களும் 100 சதவிகிதம் மின்மயமாக்கலை அடைந்த மாநிலமாக தமிழ்நாடு கருதப்படுகிறது.

கொரோனாவை எதிர்த்து போராட, சீன ஜனாதிபதி 10 நாட்களில் மருத்துவமனையை உருவாக்குகிறார். மன நல மருத்துவர் மக்களுக்கு உதவ வேண்டும் என்று நியூசிலாந்து பிரதமர் கேட்கிறார்.

ஆனால், இந்தியாவில்….பிரதமர் மோடி விளக்கு ஏற்றி வைக்க வேண்டும் என்கிறார்.

SOURCER SIVAKUMAR
Previous articleவீட்டில் விளக்கு ஏற்றுங்கள்: மோடிக்கு நடிகர் ஜீவா ஆதரவு!
Next articleவீட்டு வாசலில் மெழுகுவர்த்தி ஏந்திப் பிடித்த ரஜினிகாந்த்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here