Best First Look Poster; சிறந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எது? நீங்களும் பதில் சொல்லலாம்! தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் திரைக்கு வருகிறது.
அதில், சிறந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எது என்பது பற்றி பார்ப்போம். சிறந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எது என்பது பற்றி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம்.
தமிழ் சினிமா என்று எடுத்துக் கொண்டால் சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரை சாதாரண ஹீரோ முதல் மாஸ் ஹீரோவின் படம் வரை எத்தனையோ படங்கள் திரைக்கு வருகிறது.
மாஸ் ஹீரோக்களின் படங்கள் வருத்திற்கு ஒன்றோ அல்லது இரண்டோ தான் திரைக்கு வரும். ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், விஜய், தனுஷ், சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன், விக்ரம் என்று மாஸ் ஹீரோக்கள் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஹீரோவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரைலர், இசை வெளியீட்டு விழா, படம் ரிலீஸ் என்று வரும் போது அவரை பிடிக்காத மற்ற நடிகர்களின் ரசிகர்கள் டுவிட்டரில் விதவிதமான மீம்ஸ் போட்டு கிண்டலடிப்பது வழக்கம்.
இது காலங்காலமாக நடந்து வருகிறது. அஜித் படம் வந்தால், விஜய் ரசிகர்கள் விமர்சிப்பதும், தனுஷ் படம் வந்தால் சூர்யா ரசிகர்கள் விமர்சிப்பதும் நடந்து வருகிறது.
தர்பார் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் வலிமை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
பிகில் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படி ஒவ்வொரு ஹீரோவும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கின்றனர்.
இந்த நிலையில், தான் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இருந்த ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா லாக்டவுனில் பிரபலங்கல் பலரும் தங்களது குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மாஸ் ஹீரோக்களின் படங்களில் சிறந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எது என்பது குறித்து இங்கு காண்போம். நீங்களும் உங்களது கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம்.
கடந்த 2019 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படங்கள்: பேட்ட, விஸ்வாசம், காஞ்சனா 3, நேர்கொண்ட பார்வை, காப்பான், கைதி, நம்ம வீட்டுப் பிள்ளை, அசுரன், என்ஜிகே, கோமாளி, வந்தா ராஜாவாத்தான் வருவேன், சூப்பர் டீலக்ஸ், அயோக்யா, என்ஜிகே, கடாரம் கொண்டான், பிகில், ஆக்ஷன், சங்கத்தமிழன் என்று மாஸ் ஹீரோக்களின் படங்கள் வெளியானது.
பேட்ட
கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் பேட்ட. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
விஸ்வாசம்
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வந்த படம் விஸ்வாசம். இந்தப் படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது. குடும்ப கதையை மையப்படுத்திய இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
நேர்கொண்ட பார்வை
ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வந்த படம் நேர்கொண்ட பார்வை. பெண்களை மையப்படுத்திய இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்திருந்தார்.
பிகில்
அட்லீ இயக்கத்தில் விஜய் இருவேறு கதாபாத்திரங்களில் நடித்த படம் பிகில். கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படம் ரூ.300 கோடி வரையில் வசூல் குவித்தது.
காப்பான்
கே வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் திரைக்கு வந்த படம் காப்பான். ஆக்ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படம் ஓரளவு மட்டுமே பாக்ஸ் ஆபிஸ் வசூல் படைத்தது.
இதே போன்று அரசியல் கதையை மையப்படுத்திய என்ஜிகே படமும் வசூல் ரீதியாக அப்படி ஒன்றும் வரவேற்பு பெறவில்லை.
அயோக்யா
வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷாலை ஆரம்பத்தில் கெட்ட போலீசாகவும், பின் நல்ல போலீசாகவும் காட்டிய படம் அயோக்யா.
எதிர்மறை விமர்சனம் பெற்ற இப்படம் அந்தளவிற்கு வசூல் குவிக்கவில்லை. இதே போன்று சுந்தர் சி இயக்கத்தில் வந்த விஷாலின் ஆக்ஷன் படமும் அப்படியே அமைந்தது.
சூப்பர் டீலக்ஸ்
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்த படம் சூப்பர் டீலக்ஸ்.
இப்படம் கலவையான விமர்சனம் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து வந்த சங்கத்தமிழன் படமும் நல்ல விமர்சனம் பெற்ற போதிலும் வசூல் பெறவில்லை.
அசுரன்
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வந்த படம் அசுரன். ஆக்ஷன் டிராமா கதையை மையப்படுத்திய இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
நார்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த படமாக அசுரன் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த இயக்குநராக வெற்றி மாறன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த விருதைத் தொடந்து Behindwoods Gold Medal, Zee Cine Awards Tamil, Ananda Vikatan Cinema Awards ஆகிய விருதுகள் தனுஷ் மற்றும் வெற்றி மாறனுக்கு வழங்கப்பட்டது.
டாக்டர்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் டாக்டர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.
கேஜிஎஃப் 2
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்ஷன் திரைப்படம் கேஜிஎஃப் 2. முதல் பாகத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து இந்தப் படம் உருவாகி வருகிறது.
வலிமை
ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் படம் வலிமை. போலீஸ் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதுவரை வெளியாகவில்லை.
மாஸ்டர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் மாஸ்டர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. வரும் ஜூன் 22 ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
துப்பறிவாளன் 2
விஷால் இயக்கி, தயாரித்து நடிக்கும் புதிய படம் துப்பறிவாளன் 2. ஆக்ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியானது.
சூரரைப் போற்று
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஏர் டெக்கான் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று.
கடந்தாண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. வரும் மே 1 ஆம் தேதி படம் வெளியாக இருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஜகமே தந்திரம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜகமே தந்திரம். வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி திரைக்கு வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.
கோப்ரா
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் கோப்ரா. இந்தப் படத்தில் விக்ரம் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
அண்ணாத்த
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் அண்ணாத்த. இந்தப் படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சதீஷ் ஆகியோர் பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது.
இப்படி படங்களின் பட்டியலை அடிக்கிக் கொண்டே போகலாம். அந்த வகையில், உங்களுக்கு பிடித்த நடிகரின் படங்களில் எது சிறந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்று உங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம்.