சினிமா என்று எடுத்துக் கொண்டால் மாஸ் ஹீரோக்கள் ஒரு சிலரே இருப்பார்கள். முன்னணி நடிகர்கள், வளர்ந்து வரும் நடிகர்கள், புதுமுக நடிகர்கள் என்று ஏராளமானோர் இருப்பார்கள்.
மாஸ் ஹீரோக்களில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் இவர்களை கூறலாம். முன்னணி நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால் ஆகியோரை குறிப்பிடலாம்.
இதே போன்று நம்பர் ஒன் நடிகை லேடி சூப்பர் ஸ்டார். முன்னணி நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால், த்ரிஷா, தமன்னா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரது பெயரை குறிப்பிடலாம்.
படங்களில் மாஸ் ஹீரோக்களுக்கு நம்பர் ஒன் நடிகை, முன்னணி நடிகைகள் ஜோடியாக நடிப்பது வழக்கம்.
அது படத்தின் கதைக்கு ஏற்ப மாறுபடும். அதோடு, இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோக்களின் கையில் தான் ஹீரோயின் தேர்வு இருக்கிறது.
குடும்பக் கதை, கிளாமர் கதை, ரொமாண்டிக் கதை என்று படத்தின் கதைக்கு ஏற்பவும் ஹீரோயின் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இது போன்ற கதையில் சமந்தா, தமன்னா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, த்ரிஷால், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து விட்டனர்.
தற்போது ஹலோவில் BestOnScreenPair என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதில், அஜித் – நயன்தாரா, அஜித் – த்ரிஷா, அஜித் – காஜல் அகர்வால், அஜித் – தமன்னா ஆகியோரது கூட்டணி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இவர்களது பட்டியலை குறிப்பிட்டு இதில் சிறந்த ஜோடி யார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதே போன்று விஜய் – சமந்தா, விஜய் – த்ரிஷா, விஜய் – அசின், விஜய் – காஜல் அகர்வால், விஜய் – தமன்னா, விஜய் – நயன்தாரா ஆகியோரது கூட்டணி பட்டியலும் இந்தப் போட்டியில் இடம் பெற்றுள்ளது.
பொதுவாக விஜய்க்கு சிறந்த ஜோடியாக இருப்பது முதலில் சமந்தா. அதன் பிறகு காஜல் அகர்வால்.
விஜய் மற்றும் சமந்தா ஆகியோரது கூட்டணியில் தெறி, கத்தி மற்றும் மெர்சல் ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளது. 3 படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இதே போன்று காஜல் அகர்வால் – விஜய் கூட்டணியில் ஜில்லா, துப்பாக்கி மற்றும் மெர்சல் ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளது. இந்தப் படங்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.