Home சினிமா கோலிவுட் யாரோ ஒருவருடன் யாஷிகா ஆனந்த் டேட்டிங்: வைரலாகும் புகைப்படம்!

யாரோ ஒருவருடன் யாஷிகா ஆனந்த் டேட்டிங்: வைரலாகும் புகைப்படம்!

293
0
யாஷிகா ஆனந்த் டேட்டிங்

Yashika Aannand; தம்பி ராமையாவின் மகனுடன் நடிகை யாஷிகா ஆனந்த் டேட்டிங் சென்றுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்நிகழ்ச்சியின் போது நடிகர் மகத்தை காதலிப்பதாக சொன்னார்.

ஆனால், மகத்தோ இல்லை இல்லை தான் வேறொரு பெண்ணை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்திருந்தார். கடந்தாண்டு மகத்துக்கு திருமண நிச்சயதார்த்தம் கூட நடந்தது.

இந்த நிலையில், தற்போது யாஷிகா ஆனந்த் தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியுடன் டேட்டிங் சென்றுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இது குறித்து யாஷிகாவிடம் கேட்டபோது கூட அதற்கு அவர் மறுப்பும் தெரிவிக்கவில்லை. டேட்டிங் உண்மை என்றும் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக சிரித்துக்கொண்டே சென்றுவிடார் என்று கூறப்படுகிறது.

Yashika Aanand Boyfriend

இதற்கு முன்னதாக யாஷிகாவிற்கு அவரது நண்பர் நிரூப் முத்தம் கொடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அவரைத்தான் யாஷிகா காதலிப்பதாகவும் அப்போது கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான மணியார் குடும்பம் படத்தில் யாஷிகா ஆனந்த் மற்றும் உமாபதி இருவரும் ஒன்றாக நடித்துள்ளனர்.

இப்படத்தைத் தொடர்ந்து உமாபதி சேரனின் திருமணம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியைத் தொடர்ந்து மகத் மற்றும் யாஷிகா ஆனந்த் இருவரும் இவன் தான் உத்தமன் என்ற படத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. இதையடுத்து, ஆரவ்வின் ராஜபீமா என்ற படத்தில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here