Cocktail; ஓடிடி தளத்தில் வெளியாகும் யோகி பாபுவின் புதிய படம்! பொன்மகள் வந்தாள், பென்குயின் ஆகிய படங்களைப் போன்று யோகி பாபுவின் காக்டெய்ல் படமும் வெளியாக இருக்கிறது.
ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் ஆகிய படங்களைப் போன்று யோகி பாபுவின் காக்டெய்ல் படமும் ஓடிடி தளத்தில் வெளியாகயிருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் யோகி பாபு. நயன்தாராவை காதலிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.
கூர்கா, தர்மபிரபு, ஜாம்பி என்று வரிசையாக பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது டிக்கிலோனா, சைத்தான் கா பச்சா, சதுரங்க வேட்டை 2, அடங்காதே, ஜகஜால கில்லாடி, பன்னிகுட்டி, கடைசி விவசாயி, டேனி, கன்னி ராசி, வெள்ளை யானை, காக்டெய்ல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அறிமுக இயக்குநர் விஜய முருகன் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள படம் காக்டெய்ல். இந்தப் படத்தில் யோகி பாபு உடன் இணைந்து சாயாஜி ஷிண்டே நகைச்சுவை கலந்த இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், மனோபாலா, மைம் கோபி, சாமிநாதன், ரமேஷ், மிதுன், பாலா, குரேஷி ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் காக்டெய்ல் என்ற பறவையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா காரணமாக படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தப் படத்தை திரையரங்கில் வெளியிடாமல், ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜூலை 10 ஆம் தேதி இந்தப் படம் ஜீ5 தளத்தில் வெளியாக இருக்கிறது.
இதற்கு முன்னதாக ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படமும், கீர்த்தி சுரேஷின் பென்குயின் படமும் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.