Home சினிமா கோலிவுட் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்த யோகி பாபு?

திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்த யோகி பாபு?

304
0

Yogi Babu Wedding Reception; திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்த யோகி பாபு? கடந்த மாதம் யோகி பாபு ரகசியமாக திருமணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி நடக்க இருந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியை கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்துள்ளார் என்று தகவல் வெளியாகி வருகிறது.

கடந்த மாதம் காமெடி நடிகர் யோகி பாபு திருமணம் செய்து கொண்டார். செந்தில், கவுண்டமனி, வடிவேலு, விவேக், சந்தானம், சூரி, ரோபோ சங்கர் வரிசையில் இடம்பெற்றவர் காமெடி நடிகர் யோகி பாபு.

தமிழ் சினிமாவில் இவர் இல்லை என்றால் படங்கள் இல்லை என்றும் கூறும் அளவிற்கு ஏராளமான படங்களில் வரிசை கட்டி நடித்து வருகிறார்.

தற்போது இவரது கால்ஷீட் கிடைக்கவில்லை என்று பொலம்பும் அளவிற்கு ரொம்பவே பிஸியாக இருக்கிறாராம். காமெடி படங்களைத் தவிர ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 5 ஆம் தேதி யோகி பாபு ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

சென்னையின் திருத்தணி அருகிலுள்ள தனது குலதெய்வ கோயிலில் மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

யோகி பாபுவின் திருமண நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

யோகி பாபுவின் திருமண நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடப்பதாக தகவல் வந்தது.

முதலில் மாநில அரசால் வரும் 31 ஆம் தேதி வரையில் மட்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சரி, ஏப்ரல் 5 ஆம் தேதி தானே அதற்குள்ளாக நிலவரம் சரியாகிவிடும் என்று எண்ணிக்கொண்டிருந்த யோகி பாபுவிற்கு திடீரென்று பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தற்போது உலகத்தையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் காரணமாக வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஏப்ரல் 5 ஆம் தேதி என்று சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என்று பலருக்கும் நேரில் சென்று அழைப்பிதல் கொடுத்துள்ளார்.

தற்போது ஏப்ரல் மாதம் நடக்க இருந்த தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு மே மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளார் என்று தகவல் வந்துள்ளது.

பிரதமர் மோடி அறிவித்ததும் அறிவித்தார், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவில் 24 மணி நேரத்தைக் கூட எங்களால் சமாளிக்க முடியவில்லை என்று கதறும் அளவிற்கு சினிமா பிரபலங்களின் நிலை வந்துவிட்டது.

வீட்டில் இருந்தபடி அவர்கள் வெளியிடும் வீடியோக்கள் காமெடியாக இருந்தாலும், ஒருபுறம் பரிதாபமாகவும் இருக்கிறது. தினந்தோறும் வீட்டில் இருந்து பழக்கப்பட்டவர்களுக்கு அந்த 21 நாட்கள் என்பது புதிதல்ல.

ஆனால், ஒருநாள் கூட வீட்டில் இல்லாதவர்களுக்கு 21 நாட்கள் என்பது அதுவும் வீட்டிற்குள்ளேயே என்பது கொஞ்சம் கஷ்டம்தான். என்ன செய்வது கொரோனாவை ஒழிக்க வேண்டுமே.

SOURCER SIVAKUMAR
Previous articleகண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்த நண்பர்கள், சினிமா பிரபலங்கள்!
Next articleஒரே வாரத்தில் அடுத்தடுத்து இறப்பு: சினிமா பிரபலங்கள் அதிர்ச்சி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here