Home சினிமா கோலிவுட் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்த நண்பர்கள், சினிமா பிரபலங்கள்!

கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்த நண்பர்கள், சினிமா பிரபலங்கள்!

7891
0

Sethuraman; கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்த நண்பர்கள், சினிமா பிரபலங்கள்! நடிகர் சேதுராமனின் திடீர் மறைவிற்கு நண்பர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் டுவிட்டர் வாயிலாக கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகரும், மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென்று மரணமடைந்தார். அவரது மறைவு சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகத்தையே அச்சுறுத்தி வருவது கொரோனா வைரஸ். சீனாவில் தொடங்கி 100 நாடுகளையும் கடந்து தற்போது இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா வைரஸிற்கு 13 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளை கூட அவ்வளவு எளிதில் கடக்க முடியாமல் தவிப்பது எத்தனையோ பேர். அப்படியிருக்கும் போது ஒரே அடியாக நம்மைவிட்டுச் சென்றுவிட்டார் நடிகரும், மருத்துவருமான சேதுராமன்.

ஆம், 36 வயதாகும் சேதுராமன் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென்று மரணமடைந்துள்ளார். அவரது மறைவு சினிமா பிரபலங்கள், நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நேரில் சென்று ஆறுதல் கூற முடியாத நிலையில் தவிக்கும் பிரபலங்கள் டுவிட்டர் வாயிலாக தங்களது இரங்கலை கண்ணீர் மல்க தெரிவித்து வருகின்றனர்.

இதில், அவரது உயிர் நண்பர்களும் அடங்கும். கடந்த 2016 ஆம் ஆண்டு உமா என்பவரை திருமணம் செய்த சேதுராமனுக்கு ஒரு வயதில் சஹானா என்ற மகள் இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிபராஜா, சக்க போடு போடு ராஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடித்த படம் 50/50. இந்தப் படத்தில் சேது என்ற கதாபாத்திரத்திலேயே நடித்தார்.

மருத்துவரான சேதுராமன் சென்னையில் மட்டும் 2 ZI Clinic எனப்படும் தோல் நோய் சிகிச்சை மருத்துவமனையை திறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் குறித்தும், அதன் விபரீதம் குறித்தும், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு குறித்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதன் மூலமாக மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே தான் வீடியோ வெளியிடுவதாகவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SOURCER SIVAKUMAR
Previous articleமக்களை பாதுகாக்க சேதுராமன் பேசிய கொரோனா விழிப்புணர்வு வீடியோ!
Next articleதிருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்த யோகி பாபு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here