Home சினிமா கோலிவுட் மக்களை பாதுகாக்க சேதுராமன் பேசிய கொரோனா விழிப்புணர்வு வீடியோ!

மக்களை பாதுகாக்க சேதுராமன் பேசிய கொரோனா விழிப்புணர்வு வீடியோ!

474
0

Sethuraman Corona Awareness Video; மக்களை பாதுகாக்க சேதுராமன் பேசிய கொரோனா விழிப்புணர்வு வீடியோ! உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து நடிகரும், மருத்துவருமான சேதுராமன் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டிருந்தார்.

உலகத்தையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடிகரும், மருத்துவருமான சேதுராமன் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் கொரோனா வைரஸ் 649 பேருக்கு பரவியுள்ளது. இதில், 13 பேர் பலியாகியுள்ளனர். 42 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 593 பேர் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்த நடிகர் சேதுராமன் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தோல் நோய் சிகிச்சை மருத்துவரான சேதுரமான் சென்னையில் மட்டும் 2 ZI Clinic எனப்படும் தோல் நோய் சிகிச்சை மருத்துவமனையை திறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் தான் கொரொனா வந்து சாகமாட்டேன் என்று கூறியுள்ள்ளார்.

36 வயதாகும் சேதுராமன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார் என்ற செய்தி கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

 

SOURCER SIVAKUMAR
Previous article2 மருத்துவமனைக்கு சொந்தக்காரர் சேதுராமன் MBBS and MD!
Next articleகண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்த நண்பர்கள், சினிமா பிரபலங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here