Home சினிமா கோலிவுட் 2 மருத்துவமனைக்கு சொந்தக்காரர் சேதுராமன் MBBS and MD!

2 மருத்துவமனைக்கு சொந்தக்காரர் சேதுராமன் MBBS and MD!

5366
0
Dr and Actor Sethuraman

Sethuraman; 2 மருத்துவமனைக்கு சொந்தக்காரர் சேதுராமன் MBBS and MD! மருத்துவமரும், நடிகருமான சேதுராமன் திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி சினிமா உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நடிகர் சேதுராமன் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் என்ற அதிர்ச்சி செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

சேதுராமனுக்கு வயது 36தான் ஆகிறது. இளம் வயதில் மாரடைப்பா என்று சினிமா பிரபலங்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

யார் இந்த சேதுராமன்?

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தோல் நோய் (Dermatology) பிரிவில் மருத்துவம் படித்துள்ளார். சேதுராமன் ஒரு மருத்துவர்.

சேதுராமன் MBBS and MD

சேதுராமன் MBBS and MD என்று தனது பெயருக்கு பின்பு இருக்கக்கூடிய ஒரு மருத்துவருக்கே இந்த நிலையா? என்று கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது அதிர்ச்சி.

ZI Clinic

மருத்துவம் படித்து முடித்த சேதுராமன், கடந்த 2016 ஆம் ஆண்டு ZI Clinic எனப்படும் தோல் நோய் சிகிச்சை மருத்துவமனையை திறந்துள்ளார்.

ZI Clinic மருத்துவமனை திறப்பு விழாவிற்கு நடிகர் பாபி சிம்ஹா, நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், இசையமைப்பாளர் தரண் குமார், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் பிரம்மகுமாரி சகோதரிகள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி இரண்டாவது முறையாக ZI Clinic எனப்படும் தோல் நோய் சிகிச்சை மருத்துவமனையை திறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா

கடந்த 2013 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் சிவா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் தான் சந்தானம் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து சேதுராமன், மீண்டும் சந்தானம், விசாகா சிங் கூட்டணியில் வாலிபராஜா என்ற படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சக்க போடு போடு ராஜா படத்தில் மீண்டும் சந்தானத்துடன் இணைந்து சரவணா என்ற ரோலில் நடித்தார்.

இறுதியாக கடந்தாண்டு திரைக்கு வந்த 50/50 என்ற படத்தில் சேதுவாகவே நடித்தார். இது இவரது கடைசி படமாகவும் அமைந்துவிட்டது.

சேதுராமனுக்கு ஒரு வயதில் சஹானா என்ற மகளும், மனைவியும் இருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருந்திருக்கிறார் என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம்…

SOURCER SIVAKUMAR
Previous article100 ஏழை குடும்பங்களுக்கு உதவிய கேப்டன் தோனி
Next articleமக்களை பாதுகாக்க சேதுராமன் பேசிய கொரோனா விழிப்புணர்வு வீடியோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here