Home சினிமா கோலிவுட் Kuttrame Thandanai: குற்றமே தண்டனை திரைப்படத்தை பற்றிய ஒரு பார்வை!

Kuttrame Thandanai: குற்றமே தண்டனை திரைப்படத்தை பற்றிய ஒரு பார்வை!

535
0
Kuttrame Thandanai குற்றமே தண்டனை

Kuttrame Thandanai Movie Review: குற்றமே தண்டனை திரைப்படத்தை பற்றிய ஒரு பார்வை! Tamil Movie Review download watch online streaming ott platform.

மறைந்த படங்களில் ஒன்று!

கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் வந்த நிலையில் அவ்வப்போது கண்டுக்கொள்ளப்படாத கண்டுக்கொள்ளமுடியாத நல்ல திரைப்படங்களும் வந்திருக்கின்றன.

அப்படியான பல நல்ல திரைப்படங்களை நாம் தவறவிட்டிருப்போம். பெரிய ஹீரோக்களின் படம், அனைவரும் கொண்டாடிய படம், நன்கு புரோமட் செய்யப்பட்ட படம் போன்ற பலவித மார்க்கெட்டிங்கில் நன்றாக இருந்தாலும் சில திரைப்படங்கள் யாருக்கும் தெரியாமல் புதைந்துபோவதுண்டு.

இந்த குவாரண்டைன் காலக்கட்டத்தில் அப்படியான படங்களை பலரும் பார்த்து வருகின்றனர் என்பதும் பதிவு செய்ய வேண்டிய ஒன்று. அப்படி மறைந்து போன ஒரு திரைப்படம் ‘குற்றமே தண்டனை’.

குற்றமே தண்டனை:

‘குற்றமே தண்டனை’ என்ற திரைப்படத்தை சிலர் பார்திருப்பீர்கள். சிலர் கேள்விபட்டிருப்பீர்கள். பலர் தவறவிட்டிருப்பீர்கள்.

தலைப்பிலே தன் ஆதிக்கருவை சுமந்துக்கொண்டிருக்கிறது, ‘குற்றமே தண்டனை’. நன்கு வரவேற்பு பெற்ற திரைப்படங்களான காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை போன்ற திரைப்படங்களை இயக்கிய மணிகண்டன் அவர்கள்தான் இத்திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

முந்தையப்படங்களை போன்றே குற்றமே தண்டனை படத்தையும் மிக சாதரணமாகவும் எளிமையாகவும் இத்திரைப்படத்தை கையாண்டிருக்கிறார்.

மணிகண்டன் வெறுமனே இயக்குனர் மட்டுமல்ல ஒளிப்பதிவாளரும் கூட. அது அவரின் கதைச்சொல்லல் முறைக்கு நன்கு உதவுகிறது.

இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைக்க, நாசர், விதார்த், ரஹ்மான், பூஜா தேவரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். படம் ஓளிபரப்பாகும் நேரம் இரண்டு மணி நேரத்திற்கும் சிறியதாகும்.

கதைக்கரு:

பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மங்கிக்கொண்டிருக்கும் ஒருவர், ஒரு கொலைக்கான சாட்சியத்தை பார்க்கிறார். அந்த கொலையாளியிடமிருந்து தன் பார்வையை மீட்பதற்கான அறுவை சிகிச்சைக்கு ஏற்ற பணத்தை மட்டுமே வாங்குகிறார். இதுவே கதையின் ஆதி! இந்த கதைக்கருவை வைத்துக்கொண்டு படத்தை சீராகவும், அதே சமயம்  நம்மை guessing-ல் விட்டவாறும் திரைக்கதை சென்றுக்கொண்டிருக்கிறது.

நட்சத்திரங்கள்:

திரைப்படத்தில் நட்சத்திரங்கள் அதிகம்போல் தெரிந்தாலும், கதாப்பாத்திரமாக அனைவரும் சில நேரங்களில் மட்டுமே வந்து வந்து செல்வதுப்போல் தோன்றும்.

விதார்த் தனது நடிப்பை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக அவர் பதட்டப்படும் காட்சிகளிலெல்லாம் அத்தனை நிதானம்.

மேலும் ஆண்டவன் கட்டளை, இறைவி போன்ற திரைப்படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரமாக நடித்த பூஜா, வெகுசில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தனது கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

தனித்தனியாக சொல்வதை விட திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாகவே கதாப்பாத்திர தேர்வை சொல்லலாம்.

காட்சிகள்

குற்றமே தண்டனை என்ற படத்தின் தலைப்பிலே கதையின் இறுதியை நாம் கணித்துவிடலாம். ஆனாலும் சிறிய சிறிய திருப்பங்களையும், முக்கியமான ஒரு திருப்பத்தையும் கொண்டிருக்கிறது திரைப்படம்.

படத்தில் வரும் லொக்கேஷன்கள் (location) அனைத்திலும் எதார்த்தம் தோன்றியிருக்கிறது. திரைப்படத்தின் போக்கிற்கு காட்சிப்பதிவுகளும், லொக்கேஷன்களும் முக்கியப் பங்காற்றி இருக்கின்றன.

பின்னணியிசையில் இசைஞானி தனது பங்கை அளித்திருக்கிறார். திரைப்படத்திற்கு இசை நிறைவானதாக தெரிந்தாலுமே இளையராஜா அவர்கள் இதில் தனித்து தெரியவில்லை என்பதும் உண்மை.

‘குற்றமே தண்டனை’ கமர்ஷியல் என்று நாம் சொல்லி கொண்டிருப்பவைகளை பெரிதும் கொண்டிறாமல் இருந்தாலும், நம்மை பார்க்கவைக்கும் விதத்தில்தான் அமைந்திருக்கிறது, திரைக்கதை.

மேலும் இத்திரைப்படத்தின் இயக்குநர் மணிகண்டன் அவர்கள் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்திருக்கும் ‘கடைசி விவசாயி‘ திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் மணிகண்டன் அவர்கள் ஒரு இன்டர்வியூவில் ஒரு வாக்கியத்தை சொல்லியிருந்தார். அது இவரின் அத்தனை திரைப்படங்களிலும் இதுவரை பிரதிபலித்திருக்கிறது.  அது என்னவென்றால்

எனது கதை கற்பனையாக இருந்தாலும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் எதார்த்தமாக இருக்க வேண்டும்

என்பதுதான் அது!

Previous articleவெளிநாட்டில் சிக்கியிருக்கும் இந்திய மக்கள் தாயகம் திரும்புவதில் சிக்கல்
Next articleதிறக்கப்படும் பள்ளிகள் – தமிழக அரசு அதிரடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here