குந்தாணி சோறு நீயா போடுவ? மஞ்சிமா மோகனை திட்டித் தீர்த்த ரசிகர்! ஊரடங்கு உத்தரவு குறித்து தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்ட மஞ்சிமா மோகனை ரசிகர் ஒருவர் குந்தாணி சோறு நீயா போடுவ என்று திட்டித் தீர்த்து டுவிட் பதிவிட்டுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் ஊரடங்கு உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த நடிகை மஞ்சிமா மோகனை ரசிகர் ஒருவர் அவரது உடல் தோற்றத்தை வைத்து விமர்சித்த பதிவிட்டுள்ளார்.
அச்சம் என்பது மடைமையடா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இவர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வந்த தேவராட்டம் படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது, விஷ்ணு விஷாலின் FIR என்ற படத்தில் நடித்து வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக உலகமே அச்சத்தில் மூழ்கியுள்ளது.
இதனால் ஒட்டுமொத்த சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. கொரோனா வைரஸ்க்கு இந்தியாவில் மட்டும் 12க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
மேலும், 562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், அப்பாவி ஜனங்கள் முதல் சினிமா, அரசியல் பிரபலங்கள் என்று பலரும் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வீட்டில் சிலர் சமூக வலைதளங்களிலும், சிலர் குடும்பத்தோடும், சிலர் தனிமையிலும் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மஞ்சிமா மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில், மக்களுக்கு வீட்டில் இருப்பது ஏன் இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள் என்று பதிவிட்டிருந்தார்.
அதற்கு ரசிகர் ஒருவர் குந்தாணி நீயா சோறு போடுவ என்று நக்கலாக கேட்டிருந்தார். அந்த ரசிகருக்கு தனது மற்றொரு டுவிட்டரில், இப்படிப்பட்டவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்.
வழக்கமாக இது போன்ற டுவீட்களுக்கு நான் பதிலளிப்பதில்லை. ஆனால், மக்களை வீட்டில் இருக்க சொன்னதற்கு எனக்கு கிடைத்தது இதுதான்.
வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்பது யாருக்கும் எளிதானது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. எங்களுக்கு மட்டும் பணம் வானத்தில் இருந்து கொட்டுவதில்லை என்று பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையில், கோடி, லட்சம் என்று பணம் வைத்திருப்பவர்கள் 21 நாட்கள் மட்டுமல்ல, 210, 2100, 21000 என்று எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வீட்டிற்குள் இருக்கலாம்.
ஆனால், அப்பாவி மக்கள், அன்றாடம் கஞ்சி குடிக்கும் ஏழை மக்களின் நிலை? தினந்தோறும் வேலைக்குச் சென்றால் தான் அவர்களின் ஒருநாள் குடும்பம் நடக்கும்.
இப்பொழுது வீட்டிற்குள்ளாக இருக்க வேண்டிய நிலை? யாருக்கு தெரியும் அவர்கள் மூன்று வேலையும் கஞ்சி குடிக்கிறார்கள் என்று?