Home சினிமா கோலிவுட் மாஸ்டர் டீசர் விரைவில்: வைரலாகும் போஸ்டர்!

மாஸ்டர் டீசர் விரைவில்: வைரலாகும் போஸ்டர்!

390
0
Master Teaser

Master Teaser; மாஸ்டர் டீசர் விரைவில்: வைரலாகும் போஸ்டர்! தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் படத்தின் டீசர் விரைவில் வெளிவரும் என்று கூறும் போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் டீசர் விரைவில் வெளியாக இருப்பதாக போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில், விஜய் உடன் இணைந்து மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு, சஞ்சீவ், பிரேம், நாசர், பிரிகிதா, பூவையார், ரமேஷ் திலக், ரம்யா சுப்பிரமணியன், தீனா, கௌரி கிஷான் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களில் 8 பாடல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதில், மாஸ்டர் வாத்தி கம்மிங், குட்டி ஸ்டோரி ஆகிய பாடல்கள் யூடியூப்பில் புதிய சாதனை படைத்தது.

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படம் திரைக்கு வர இருந்தது.

ஆனால், நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. அதோடு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக மாஸ்டர் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. மாஸ்டர் எப்போது, திரைக்கு வரும் என்று யாருக்குமே தெரியாத. இந்த நிலையில், மாஸ்டர் டீசர் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, மாஸ்டர் டீசர் விரைவில் வெளிவரும் என்று கூறும் போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Previous articleSathankulam: எந்தவொரு மனிதருக்கும் இப்படியொரு கொடுமை நிகழக்கூடாது: பிரியங்கா சோப்ரா!
Next articleலிப் டூ லிப் கிஸ் உடன் களைகட்டிய திருமணம்: கிறிஸ்துவ முறைப்படி நடந்த வனிதா மேரேஜ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here