Home சினிமா கோலிவுட் தளபதி பர்த்டே ஸ்பெஷல்: மாஸ்டர் டிரைலர் வெளியீடு?

தளபதி பர்த்டே ஸ்பெஷல்: மாஸ்டர் டிரைலர் வெளியீடு?

259
0
Master Trailer Release Date

தளபதி பர்த்டே ஸ்பெஷல்: மாஸ்டர் டிரைலர் வெளியீடு? வரும் 22 ஆம் தேதி விஜய் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், பிறந்தநாள் பரிசு கொடுக்கும் வகையில், மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கின்றது.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் டிரைலர் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தளபதி விஜய். தொடர்ந்து குடும்பக் கதையை மையப்படுத்திய படங்களில் நடித்து வருகிறார்.

பெரும்பாலும் இவரது படங்களில் குழந்தைகளை கவரும் காட்சிகளும், அரசியல் கட்சிகளை விமர்சிக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கும். அரசியல் தொடர்பான காட்சிகள் இருப்பதாலோ என்னவோ படம் சர்ச்சைக்குப் பிறகே வெளியாகிறது.

ஆனால், மாஸ்டர் படத்தில் கொஞ்சம் விதிவிலக்கு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை, படப்பிடிப்பு தளபத்தில் பாஜகவினர் போராட்டம் என்று பல பிரச்சனைகளை கடந்து வந்தது.

சரி, பிரச்சனைகள் எல்லாம் முடிந்து படம் அறிவித்தபடி கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று பார்த்தால் அதுக்குள்ளாக கொரோனா வைரஸ் நாட்டையே உலுக்கியது.

கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதோடு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், லாக்டவுனும் அமல்படுத்தப்பட்டது. தற்போது, 5ஆவது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது.

இந்த நிலையில், வரும் 22 ஆம் தேதி தளபதி விஜய் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு விஜய்க்கு பரிசு கொடுக்கும் வகையிலும், ரசிகர்களின் காத்திருப்புக்கு பலன் கிடைக்கும் வகையிலும், மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் பிறந்தநாளுக்கு இன்னும் 11 நாட்கள் உள்ள நிலையில், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக நடிகர் அர்ஜூன் தாஸ் கூறுகையில், மாஸ்டர் டிரைலரை 6 முறை பார்த்ததாகவும், மரண மாஸாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆகையால், இந்தப் பிறந்தநாள் மாஸ்டர் டிரைலர் பிறந்தநாளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleகொரோனா பாதிப்பு: ராணா திருமணம் தள்ளி வைப்பு?
Next articleபிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்: ரசிகர்களுக்கு தளபதி விஜய் அன்பு வேண்டுகோள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here