Meera Mithun Photoshoot; மீரா மிதுன் கவர்ச்சி போட்டோஷூட்: வைரலாகும் புகைப்படம்! பிக் பாஸ் புகழ் மீரா மிதுன் தொடர்ந்து கவர்ச்சி போட்டோஷூட் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மீரா மிதுன் கவர்ச்சி போட்டோஷூட் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபமானவர் நடிகை மீரா மிதுன். ஆம், ஒரு சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.
அதில் முக்கியமான படம் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம். இந்தப் படத்தில் நடித்த நடிகர் கலையரசனுக்கு மனைவியாக நடித்திருந்தார்.
சர்ச்சைக்கு பேர் போனவர் என்று மீரா மிதுனை பலரும் விமர்சிக்கின்றனர். ஆம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரன் தன்னை தவறாக தொட்டார் என்று சர்ச்சையை ஏற்படுத்தினார்.
அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டதை விசாரிக்க போலீசார் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றனர். இது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மீரா மிதுனின் போல் ஆடியோவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்வளவு ஏன், தான் அரசியலுக்கு வருவதாகவும், நான் தான் 2021 ல் தமிழக முதல்வர் என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.
இந்த சர்ச்சையெல்லாம் போதாது என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களின் கோபத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறார்.
தற்போது ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என்று குறிப்பிட்டு 3 புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள், 300 பேர், 400 பேர், 500 பேர், 1000 பேர் என்று மீரா மிதுன் அக்கவுண்டை ரிப்போர்ட் செய்தால் அக்கவுண்டே பயன்படுத்த முடியாது. அப்போ அதை செய்யுங்க என்று விமர்சித்துள்ளனர்.