Meghna Vincent Divorce and Don Tony; தெய்வம் தந்த வீடு நடிகை மேக்னா விவாகரத்து: கணவருக்கும், காதலிக்கும் திடீர் திருமணம்! தெய்வம் தந்த வீடு என்ற தொடரின் மூலம் புகழ்பெற்ற நடிகை மேக்னா வின்சென்ட், கணவர் டான் டோனியை விவாகரத்து செய்துள்ளார்.
மனைவி நடிகை மேக்னா வின்சென்டை விவாகரத்து செய்த கையோடு காதலியை கரம் பிடித்த டான் டோனிக்கு (Don Tony) பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கேரளா மாநிலம் எடகொச்சி பகுதியைச் சேர்ந்தவர் நடிகை மேக்னா வின்சென்ட். இவர், தமிழ் மற்றும் மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
தமிழில், தெய்வம் தந்த வீடு, பொன்மகள் வந்தாள், அவளும் நானும் ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இது தவிர கயல் என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி தனது தோழி டிம்பிள் ரோஸின் அண்ணன் டான் டோனியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், ஒரு வருடத்திலேயே அவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் விவாகரத்து கிடைத்துள்ளது.
விவாகரத்து கிடைத்த அடுத்த வாரமே டான் டோனி தனது காதலியான டிவைன் கிளாரா மணிமுறியில் (Divine Clara Manimuriyil) என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை டான் டோனி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு, கோவிட் 19 லாக்டவுன் திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது.
பப்ளிக் உடன் தொடர்பு இல்லாததால், மாஸ்க் பயன்படுத்தவில்லை. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடாததற்கு மன்னிக்கவும். லாக்டவுன் என்பதால், அறிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
திருச்சூரில் நடந்த இவர்களது திருமண புகைப்படங்களை பார்த்த பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால், கணவரின் இந்த திடீர் திருமணத்தைப் பார்த்த மேக்னா வின்சென்ட் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதற்கிடையில், மேக்னா தன்னுடன் பொன்மகள் வந்தாள் தொடரில் நடித்த விக்கி க்ரிஷை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.
Posted by Don Tony on Wednesday, May 20, 2020