Home சினிமா கோலிவுட் இப்படியெல்லாமா கண்டிஷன் போடுவாங்க? துப்பறிவாளன் 2 மிஷ்கினின் 15 நிபந்தனை!

இப்படியெல்லாமா கண்டிஷன் போடுவாங்க? துப்பறிவாளன் 2 மிஷ்கினின் 15 நிபந்தனை!

437
1
Mysskin Thupparivaalan 2

துப்பறிவாளன் 2 படம் தொடர்பாக நடிகர் விஷாலுக்கு, இயக்குநர் மிஷ்கின் எழுதிய 15 நிபந்தனைகளை கொண்ட கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

துப்பறிவாளன் 2 படத்தின் போது விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் இடையில் மனஷ்தாபம் ஏற்பட்டுள்ளது.

அப்போது மிஷ்கின் 15 நிபந்தனைகள் அடங்கிய கடிதம் ஒன்றை விஷாலுக்கு எழுதியுள்ளார். அந்த கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல் ஆகியோரது நடிப்பில் வந்த சூப்பர் ஹிட் படம் துப்பறிவாளன்.

துப்பறிவாளன் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து துப்பறிவாளன் 2 தயாராகி வருகிறது.

துப்பறிவாளன் 2 படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. இளையராஜா படத்திற்கு இசையமைக்கிறார்.

லண்டனில் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு முதல்கட்ட படப்பிடிப்பும் முடிந்தது.

2ம் கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்குள் விஷால் – மிஷ்கின் இடையில் மோதல் ஏற்பட்டது.

இதன் காரணமாக துப்பறிவாளன் 2 படத்திலிருந்து மிஷ்கின் அதிரடியாக நீக்கப்பட்டார். தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தை விஷாலே இயக்குவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், விஷாலுக்கு இயக்குநர் மிஷ்கின் 15 நிபந்தனைகள் கொண்ட கடிதம் ஒன்றை எழுதியதாகவும், அந்த நிபந்தனைகளுக்கு விஷால் ஒத்துவரவில்லை என்றும் கூறப்படுகிறது.

தற்போது மிஷ்கினின் 15 நிபந்தனைகள் கொண்ட கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  1. ஜிஎஸ்டி உள்பட சம்பளம் ரூ.5 கோடி.
  2. ஹிந்தி ரீமேக் உரிமை மட்டுமே இயக்குநரிடம் இருக்கிறது. ஆதலால், அவர் ரீமேக் உரிமையை யாரிடம் வேண்டுமானாலும் விற்கலாம். தயாரிப்பாளருக்கு இதில், எந்த உரிமையும் இல்லை. ஆட்சேபனையும் இருக்கக் கூடாது.
  3. விஷால் நடிகராகவும், விஷால் பிலிம் பேக்டரியை தயாரிப்பு நிறுவனமாக கொண்டுள்ள இந்தப் படம் கடைசி படம் என்பதால், படத்தின் தொடர்ச்சி பாகங்கள் (Sequels and Prequels), துப்பறிவாளன் 1, துப்பறிவாளன் 2 படத்தில் இருக்கும் அனைத்துக் கதாபாத்திரங்களின் பெயர்கள் அனைத்து அறிவுசார் சொத்துரிமைகளும் இயக்குநருக்குச் சொந்தம்.

விஷால் பிலிம் பேக்டரியிலிருந்து படத்தின் தலைப்பு உரிமையை இயக்குநருக்கு மாற்றியதற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலுக்கு ஆட்சேபனை இல்லை என்று என்ஓசி சான்றிதழை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்கும்.

  1. 2ம் கட்ட படப்பிடிப்பின் போது ஆரம்பம் முதல் கிட்டத்தட்ட 90 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவில்லை என்றால், இயக்குநர் மற்ற படங்களில் இணைந்து பணியாற்றலாம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு 90 நாட்களுக்குள் முடியவில்லை என்றால், இயக்குநருக்கு நேரம் கிடைக்கும் வரை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் காத்திருக்க ஒப்புக்கொள்ள வேண்டும்.
  2. தயாரிப்பாளர் அல்லது அவரது பிரதிநிதியாக இருப்பவருக்கு இயக்குநருடன் நேரடி தொடர்பு இருக்காது. இயக்குநரின் மேலாளர் எல்.வி.ஸ்ரீகாந்த் லக்‌ஷ்மண் மட்டுமே இயக்குநரை தொடர்பு கொள்ளும் ஒருவர். விஷால் பிலிம் பேக்டரியால் நியமிக்கப்பட்ட தயாரிப்பாளர் சர்மாட் மட்டுமே தயாரிப்பாளரை தொடர்புகொள்ள அவரது பிரதிநிதியாக செயல்படுவார்.
  3. மேற்குறிப்பிட நிபந்தனைகள் ஒப்புக்கொள்ளப்பட்டவுடன் இயக்குநருக்கு கொடுக்கப்பட வேண்டிய பணம் இயக்குநரால் முடிவு செய்யப்படும்.
  4. இயக்குநரின் ஊழியர்களின் நிலுவைத் தொகை (இங்கிலாந்து கார் வாடகை உள்பட) அனைத்தும் முன்பாகவே தீர்க்கப்பட வேண்டும்.
  5. படப்பிடிப்பிற்கான அனைத்து இடங்களையும் தேர்வு செய்யும் உரிமை இயக்குநரையே சேரும். இதில், தயாரிப்பாளரோ அல்லது அவரது பிரதிநிதியோ தலையிடக்கூடாது.
  6. படத்தின் பட்ஜெட்டில் இயக்குநருக்கு எந்த தொடர்பும், சம்பந்தமும் இல்லை. ஆனால், படத்தின் செலவை குறைக்க இயக்குநர் தன்னால் முடிந்த முயற்சியை மேற்கொள்வார். இருப்பினும், படத்தின் மொத்த செலவுக்கு இயக்குநர் பொறுப்பேற்கவே மாட்டார்.
  7. உதவி இயக்குநர், துணை இயக்குநர், இணை இயக்குநர் ஆகியோருக்கு வழங்கப்படும் சம்பளம் தணிக்கை விண்ணப்பிக்கும் வரை ஒவ்வொரு மாதமும் இயக்குநரால் நிர்ணயிக்கப்படும். அந்த சம்பளத்தை மட்டுமே கொடுக்கவேண்டும்.
  8. இயக்குநர் மற்றும் அவரது உதவியாளருக்கு தனியாக தங்குமிடம் இருக்க வேண்டும். மற்ற படக்குழுவினருடன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
  9. ரூ.66,000 அலுவலக வாடகை மற்றும் ரூ.5000 பராமரிப்புத் தொகை தயாரிப்பாளர்களால் செலுத்தப்படும். டிடிஎஸ் சான்றிதழ் கழிப்பட்டால் தணிக்கைக்கு முன் வழங்கப்படும். அலுவலக வாடகைக்கு மேல் கூடுதலாக வரும் உணவு, மின்சார, பிற செலவுகள் வரை படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நாளிலிருந்து படத்தின் இறுதி வடிவம் கொடுக்கும் வரை தயாரிப்பாளரால் ஏற்கப்படும்.
  10. படம் பற்றி அனைத்து தகவல்களும் மின்னஞ்சல் மூலமாகவே இருக்கும்.
  11. இயக்குநருக்கான சுதந்திரம், முடிவெடுக்கும் முறை ஆகியவற்றிற்கு இடையூறு ஏற்படும் வகையிலோ அல்லது இயக்குநரையோ அல்லது அவரது உதவியாளரையோ அவமதித்தல், துஷ்பிரயோகம் செய்யப்படுதல், மோசமாக நடத்தப்படுதல், இயக்குநரின் மனநிலையை பாதிக்கும் வகையில், ஏதேனும் சம்பவம் நடந்தால், இயக்குநர் மற்றும் அவரது குழுவினரும் தாராளமாக இப்படத்திலிருந்து வெளியேற உரிமை உண்டு.
  12. மேலே குறிப்பிடப்பட்ட விவரங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டவுடன் அவற்றிற்குரிய சாராம்சம் முறையான ஒப்பந்தத்தில் சுருக்கமாக எழுதப்பட்டு இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையில் கையெழுத்திடப்படும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

SOURCER SIVAKUMAR
Previous articleகாங்கிரஸ் எம்‌எல்‌ஏ; கொடுக்காப்புளி சாப்பிட்டால் கொரோனா வராது
Next articleதமிழக பாஜக தலைவர்: யாருப்பா இந்த முருகன்? திடீரென விஸ்வரூபம் எடுத்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here