தமிழக பாஜக தலைவர் பதவி தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டது முதல் காலியாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்படலாம் என சில மாதங்கள் முன்பு தகவல்கள் வெளியாகின.
அதேபோல் பாஜக தலைவர் போட்டிக்கு எச்.ராஜா, பொன்னார், வானதி சீனிவாசன், கேடி ராகவன், கருப்பு முருகானந்தம் பெயர்கள் அடிபட்டு வந்தது.
இப்படி ஒரு நிலையில் இன்று புதிய பாஜக தலைவராக எல்.முருகன் என்பவர் அறிவிக்கப்பட்டு உள்ளார். பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இதைத் தெரிவித்துள்ளார்.
40 ஆண்டுகால வரலாறு: தலித் தலைவர்; பாஜகவின் புதிய புரட்சி – சிஎம் நாற்காலி தயார்
யார் இந்த எல்.முருகன்
தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் துணைத்தலைவராக இருந்தவர். எஸ்.சி கமிஷனின் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றினார்.
சங்கரன்கோவில், பரமக்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க வேட்பாளராக நின்று தோல்வியைத் தழுவினார்.
பா.ஜ.க மூத்த தலைவர்கள் சிலருடன் எல்.முருகன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். இதன் காரணமாக சீனியர் தலைவர்களை ஓரம் கட்டிவிட்டு எல்.முருகன் பதவியை தட்டிச்சென்று உள்ளார்.
பாஜகவில் பெரிய ஆரவாரம் செய்யாத, மக்களிடம் பெரிதும் பரிட்சியம் இல்லாத, எந்த சர்ச்சையிலும் சிக்காத ஒரு புதிய முகத்தை பாஜக தேர்வு செய்துள்ளது.
வரும் தேர்தலில் நிச்சயம் பாஜக வழுவாக கால் ஊன்ற முறையான வியூகங்களை வகுத்து வருகிறது என்பது இதன் மூலம் புலப்படுகிறது.