Home சினிமா கோலிவுட் லண்டனில் வேட்டையை தொடங்கும் விஷால்: துப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

லண்டனில் வேட்டையை தொடங்கும் விஷால்: துப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

335
0
Thupparivaalan 2 First Look

Thupparivaalan 2 First Look; துப்பறிவாளன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (Thupparivaalan 2 First Look) போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

விஷால் (Vishal) நடிப்பில் உருவாகியுள்ள துப்பறிவாளன் 2 (Thupparivaalan 2 First Look) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

விஷால் இயக்கி நடிக்கும் புதிய படம் துப்பறிவாளன் 2. இப்படத்தின் முதல் பாகத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார்.

துப்பறிவாளன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே துப்பறிவாளன் 2 உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தற்போது துப்பறிவாளன் 2 விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. லண்டனில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மிஷ்கின் அதிரடியாக நீக்கப்பட்டர். இதையடுத்து, விஷாலே இப்படத்தை இயக்குவதாக அறிவித்தார்.

துப்பறிவாளன் 2 படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுக்கும் தனது புதிய முயற்சிக்கு மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறியிருந்தார்.

விஷால் படத்தில் நடிப்பதற்கு முன்னதாக ஆக்‌ஷன் கிங் அர்ஜூனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தார். அர்ஜூன் இயக்கத்தில் வந்த வேதம் படத்தில் விஷால் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது துப்பறிவாளன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://platform.twitter.com/widgets.js

துப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஷால் கையில் குடையுடன், ரெயின்கோட் அணிந்தவாறு, தலையில் தொப்பியை பிடித்தவாறு இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

துப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்போது அவர் கூறியிருப்பதாவது; கணியன் பூங்குன்றன் மற்றும் மனோ மறுபடியும் ஆக்‌ஷனில் இறங்கிவிட்டார்கள். ஆனால், இந்த முறை லண்டனில் வேட்டை என்று பதிவிட்டுள்ளார்.

துப்பறிவாளன் 2 படத்தின் மூலம் விஷால் இயக்குநர் அவதாரம் எடுக்கும் நிலையில், VishalDirection1 மற்றும் Thupparivaalan2 ஆகிய டுவிட்டர் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

துப்பறிவாளன் 2 படத்திற்காக இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள விஷாலுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், இயக்குநர் மிஷ்கின், விஷாலுக்கு எழுதிய 15 நிபந்தனைகள் கொண்ட கடிதம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleதமிழக பாஜக தலைவர்: யாருப்பா இந்த முருகன்? திடீரென விஸ்வரூபம் எடுத்துள்ளார்
Next articleமருத்துவமனைக்கு சென்று லோகேஷ் பாப்-ஐ சந்தித்த விஜய் சேதுபதி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here