Home சினிமா கோலிவுட் மருத்துவமனைக்கு சென்று லோகேஷ் பாப்-ஐ சந்தித்த விஜய் சேதுபதி!

மருத்துவமனைக்கு சென்று லோகேஷ் பாப்-ஐ சந்தித்த விஜய் சேதுபதி!

726
0
Lokesh Pop Addy

Lokesh Pop Addy; லோகேஷ் பாப்-ஐ சந்தித்த விஜய் சேதுபதி அவருக்கான மருத்துவ செலவையும் வழங்கியுள்ளார்.

ஆதித்யா தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர் லோகேஷ் பாப் (Lokesh Pop Addy).

இவர், விஜய் சேதுபதி நடிப்பில் வந்த நானும் ரௌடி தான் படத்தில் காமெடியனாகவும் நடித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டு கை, கால் செயலிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சைக்காக நண்பர்கள் போதுமான நிதியுதவியை திரட்டியுள்ளனர். மேலும், சன் நெட்வொர்க் மூலமாக சிகிச்சைக்கான முழு தொகையையும் அளித்துள்ளது என்று அவரது நண்பர் குட்டி கோபி தெரிவித்தார்.

மேலும், சிகிச்சை முடிந்து தற்போது லோகேஷ் பாப் நலமாக இருப்பதாகவும், விரைவில் பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட இருப்பதாகவும் அண்மையில் சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, (Vijay Sethupathi) லோகேஷ் பாப்-வை மருத்துவமனைக்கு சென்று நேரில் பார்த்து நலம் விசாரித்துள்ளார். மேலும், மருத்து செலவிற்காக ஆகும் தொகையை வழங்கியுள்ளார்.

தற்போது விஜய் சேதுபதி, லோகேஷ் பாப்-வை மருத்துவமனையில் சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://platform.twitter.com/widgets.js

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here