Peter Paul Son; என் அப்பா குடிகாரர்: வனிதா பொய் சொல்கிறார்: பீட்டர் பால் மகன்! எனது அப்பா ஒரு குடிகாரர் என்றும், வனிதா கூறுவது பொய் என்றும் பீட்டர் பாலின் மகன் கூறியுள்ளார்.
எனது அப்பா ஒரு குடிகாரர் என்று பீட்டர் பால் மகன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா கடந்த 1995 ஆம் ஆண்டு விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
ஆனால், அதன் பிறகு நடித்த எந்தப் படமும் போதுமான வரவேற்பு பெறவில்லை. இதையடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அப்போது வனிதாவிற்கு வயது 19. ஆகாஷ் – வனிதா தம்பதியினருக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் இருக்கின்றனர்.
திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2007 ஆம் ஆண்டு விவகாரத்து பெற்றார். அதன் பின்னர், அதே ஆண்டில் ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை 2ஆவது திருமணம் செய்து கொண்டார்.
ராஜன் ஆனந்த் – வனிதா தம்பதியினருக்கு ஜெயந்திகா என்ற மகள் இருக்கிறார். இந்த திருமணமும் 2010 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
தற்போது வனிதா, ஜோவிகா மற்றும் ஜெயந்திகா ஆகிய இரு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 27 ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை 3ஆவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலானது. திருமணம் முடிந்த கொஞ்ச நேரத்திலேயே பீட்டர் பாலின் முதல் மனைவி சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
2 குழந்தைகளுடன் 7 வருடங்களாக பிரிந்து வாழும் தன்னை விட்டு விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், இன்னும் விவாகரத்து கூட பெறவில்லை என்றும் பீட்டர் பால் மீது புகார் அளித்துள்ளார்.
இது குறித்து எலிசபெத் ஹெலன் கூறுகையில், பீட்டர் பாலுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதற்காக இரு முறை போதை மீட்பு மையத்தில் அவரை சேர்த்திருந்தோம்.
இதற்கு முன்னதாக பல பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்தார். சரியான வருமானமும் இருக்காது. தற்போது வனிதாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட நினைத்துவிட்டார். அவருக்கு இது பத்தோடு பதினொன்னு போலத்தான் என்று கூறியுள்ளார்.
மேலும், எனது மகனின் படிப்புக்காகதான் நான் அவரை விட்டு விலகினேன். அதன் பிறகு எனது அம்மா வீட்டில் இருந்தேன்.
தற்போது பீட்டர் பால் திருமணம் குறித்து அனைவரும் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். இப்போத் எனது மகள் அப்பா இல்லையே என்று வருத்தப்படுகிறாள்.
எனக்கு என் புருஷன் வேண்டும் என்றும், எனது குழந்தைகளுக்கு அப்பா வேண்டும் என்றும் எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வனிதா தனது பீட்டர் பால் குடிகாரர் இல்லை என்றும் திருமணத்தின் போது ஒயிட் ஒயின் மட்டுமே குடித்தார் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இது குறித்து பீட்டர் பாலின் மகன் கூறுகையில், எனது அப்பா குடிப்பழக்கம் காரணமாக மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டிருந்தார் என்றும், ஆனால், மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பிக்கும் போது கீழே விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
தனக்கும், மற்றொரு பெண்ணிற்கும் தொடர்பு இருப்பதாகவும், அந்த பெண்ணின் வயிற்றில் தனது குழந்தை வளர்வதாகவும் அப்பா, அம்மாவிடம் கூறியதால் தான் இருவரும் பிரிந்தாக பீட்டர் பால் மகன் தெரிவித்துள்ளார்.
எனது அப்பாவிற்கு திருமணம் என்று கேள்விபட்டபோது எந்த வருத்தமும் இல்லை. ஏனென்றால், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது.
அவர் எங்கு வேலை பார்த்தாலும், அங்குள்ள பெண்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வார் என்று பீட்டர் பால் மகன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.