Home சினிமா கோலிவுட் கணவருக்கு முடி வெட்டி அழகு பார்த்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உரிமையாளர்!

கணவருக்கு முடி வெட்டி அழகு பார்த்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உரிமையாளர்!

252
0
Preity Zinta Hair Cut Video

Preity Zinta Hair Cut Video; கணவருக்கு முடி வெட்டி அழகு பார்த்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உரிமையாளர்! கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளரான நடிகை பிரீத்தி ஜிந்தா தனது கணவருக்கு முடி வெட்டி அழகு பார்த்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனது கணவருக்கு முடி வெட்டி விட்ட நடிகை பிரீத்தி ஜிந்தாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், என்ன செய்வது என்று பலரும் கதி கலங்கி நிற்கின்றனர்.

தற்போது இந்தியா முழுவதும் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. எனினும், பலவித விதிமுறைகளுடன் தான் இந்த ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு காலத்தில் சலூன் கடைகள் முற்றிலும் திறக்கப்படவில்லை. இதனால், பலர் தாடியுடனும், அதிகளவில் தலைமுடியுடனும் காணப்பட்டனர். சிலர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறினர்.

தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட்டு சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. எனினும், சிலர் எங்கு நமக்கு கொரோனா தொற்றிவிடுமோ என்று பயத்திலும் இருந்து வருகின்றனர். இதனால், அவர்கள் சலூன் கடைக்கு செல்வதில்லை என்று கூறப்படுகிறது.

இதன் விளைவாக அவர்களே தங்களுக்கு முடி வெட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிலர் தங்களது மகன், மகள் அல்லது மனைவி மூலம் முடி வெட்டிக் கொள்கின்றனர்.

இவ்வளவு ஏன், சினிமா பிரபலங்களும் தங்களது தலைமுடியை தாங்களே வெட்டிக்கொண்டும், தங்களது அன்புக்குரியவர்களுக்கு முடி வெட்டி விடும் அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா தனது கணவருக்கு முடி வெட்டிவிட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஆம், நடிகையும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளருமான பிரீத்தி ஜிந்தா தனது கணவருக்கு தானே முடி வெட்டி விட்டு அழகு பார்த்துள்ளார்.

மிகவும் கச்சிதமாக தனது கணவருக்கு தான் முடி வெட்டிவிட்டதாகவும், அவரை பார்ப்பதற்கு புத்துணர்ச்சியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleநயன்தாராவின் அழகின் ரகசியம்: இதைத் தான் தினமும் செய்வாராம்!
Next articleகுழந்தை தொழிலாளர் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்: அஜித் ரசிகர்கள் வேண்டுகோள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here