Home சினிமா கோலிவுட் விஜய்க்கு விரித்த வலை; சிக்கியது ரஜினி

விஜய்க்கு விரித்த வலை; சிக்கியது ரஜினி

1387
0
விஜய்க்கு விரித்த வலை

விஜய்க்கு விரித்த வலை; சிக்கியது ரஜினி

பேட்ட படத்துடன் விஸ்வாசம் ஏன் ரிலீஸ் ஆனது. திட்டமிடப்பட்டே ரஜினியுடன் மோதியதா? என்ற கேள்விக்குப் படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் பேட்டி கொடுத்துள்ளார்.

விஸ்வாசம் படம் முதலில் தீபாவளிக்கு வெளியிடவே முடிவு செய்தோம். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் காரணமாக ரிலீஸ் செய்யத் தாமதமாகிவிட்டது.

அதன்பிறகு பொங்கலுக்கு ரிலீஸ் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தோம். அங்கும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

ரஜினி நடித்த பேட்ட படத்தைப் பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துவிட்டனர். ரஜினியுடன் மோதும் நிலை தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.

எனவே இதுகுறித்து சன்பிக்சர் நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினோம். அவர்களும் பொங்கலுக்கு வருவதில் உறுதியாக இருந்தனர்.

ரஜினியை ஹீரோவாக வைத்து 6 படங்கள் தயாரித்துவிட்டேன். இதனால் கொஞ்சம் தர்ம சங்கடமாகவே இருந்தது.

இது திட்டமிட்ட மோதல் அல்ல. சினிமா ஸ்ட்ரைக் மட்டும் இல்லை எனில் விஜய்யுடன் தான் மோதி இருப்போம் எனக் கூறினார்.

Previous articleகாம்பீர், சேவாக், சச்சின்: மூவரையும் ஓரம் கட்டியவர் தோனி!
Next articleஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு: திக் திக் நிமிடங்கள்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here