BetheREALMAN சவாலை கண்டுகொள்ளாத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! சிரஞ்சிவி கொடுத்த சவாலை ரஜினிகாந்த் இதுவரை கண்டுகொள்ளவும் இல்லை, செய்து முடிக்கவும் இல்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது.
BetheREALMAN சவாலை ரஜினிகாந்த் இதுவரை கண்டுகொள்ளவில்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா லாக்டவுனில் பிஸியாக இருக்கும் பிரபலங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டாஸ்க்கை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், அர்ஜூன் ரெட்டி படத்தின் இயக்குநர் சந்தீப் வங்கா ரெட்டி #BetheREALMAN என்ற ஹேஷ்டேக்கில் புது டுவிட்டர் சவாலை அறிமுகம் செய்துள்ளார்.
அதில், ஒரு ஆணால், தனது மனைவிக்கு உதவியாக வீட்டு வேலைகளை சிறப்பாக செய்து காட்ட முடியும். இது போன்ற தருணங்களில் தன்னுடைய மனைவியை தனியாக வேலை செய்ய விடமாட்டார்.
தயவு செய்து வீட்டு வேலைகளுக்கு உதவுங்கள் #BetheREALMAN . இதை ஊக்கப்படுத்தி இயக்குநர் ராஜமௌலியை ஒரு வீடியோ வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த சவாலை ஏற்றுக்கொண்ட ராஜமௌலி, வீட்டை சுத்தம் செய்து, ஜன்னல், கதவு ஆகியவற்றை துடைத்து எடுக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அவர் இந்த சவாலை வெற்றிகரமாக செய்து முடித்ததுடன் ஆர்ஆர்ஆர் RRR படத்தில் நடிக்கும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரணுக்கு இந்த சவாலை கொடுத்துள்ளார்.
ஜூன் என்.டிஆர் இந்த சவாலை முடித்து சிரஞ்சீவிக்கு சவால் கொடுத்துள்ளார். சிரஞ்சிவீயும் இந்த சவாலை வெற்றிகரமாக செய்து முடித்து ரஜினிகாந்த் மற்றும் மணிரத்னம் ஆகியோருக்கு கொடுத்துள்ளார்.
ஆனால், இதுவரை ரஜினிகாந்த் மற்றும் மணிரத்னம் இருவருமே அந்த சவாலை செய்யவில்லை.
மணிரத்னத்திற்கு தனியாக டுவிட்டர் அக்கவுண்ட் இல்லை. ஆனால், ரஜினிக்கு இருக்கிறது. அவர் அடிக்கடி டுவிட்டர் பயன்படுத்துவது கிடையாது. ஆதலால் இதுவரை #BetheREALMAN சேலஞ்சை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.