Ramya Pandiyan; பிக் பாஸ் தமிழ் 4 ஆவது சீசனில் குக்கு வித் கோமாளி ரம்யா பாண்டியன்! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சியில் நடிகை ரம்யா பாண்டியன் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகை ரம்யா பாண்டியன் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டுதோறும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை நடந்து 3 நிகழ்ச்சிகளையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார்.
வரும் ஜூன் மாதம் தொடங்க இருந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கொரோனா காரணமாக தாமதமாக தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
கொரோனா காரணமாக வரும் 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும், மே, ஜூன் வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இயல்பு வாழ்க்கை திரும்ப எப்படியும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் ஆகும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி அதன் பிறகு தான் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க, இந்த சீசனுக்கான போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருவதாக தகவல் வருகிறது. அதன்படி, இந்நிகழ்ச்சியில், ரம்யா பாண்டியன் கண்டிப்பாக கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
இதுவரை விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும், கலக்கப்போவது யாரு சீசன் 9 நிகழ்ச்சியிலும் ரம்யா பாண்டியன் கலந்து கொண்டுள்ளார்.
ஆகையில், விஜய் டிவி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ரம்யா பாண்டியனுக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் அன்பைப் பெற்ற ரம்யா பாண்டியனுக்கு பிக் பாஸ் 4 ஒரு திருப்பு முனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், சிவாங்கி, புகழ், மணிமேகலை ஆகியோரது பெயர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
ஆனால், மணிமேகலை நிகழ்ச்சி தொகுப்பாளினி என்பதால், அவர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. ரம்யா பாண்டியன் கலந்து கொள்வதால் புகழ் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.