Home காணொளி Sarkar Teaser Mistakes and Review

Sarkar Teaser Mistakes and Review

796
0
Sarkar Teaser Troll

Sarkar Teaser Troll | சர்கார் டீசர் பரிதாபங்கள்

click and play the video

[Modula id=”2″]

சர்கார் டீசர் ஓப்பனிங்கே சன்பிக்சர் உலக உருண்டை. சர்காருன்னு ஒரு படத்த வச்சே, மழைக்கு கூட சன்டிவி பக்கம் ஒதுங்கதவங்களையும், சீரியல் பாக்க வச்சிட்டாரு கலாநிதிமாறன். அதுமட்டுமா, யுடியூப் சப்ஸ்கிரைப்பரும் எகிறிட்டாங்க.

அடுத்து இரவு நேர பாரிஸ் சிட்டி. வரலட்சுமி வாய்ஸ். விஜய்யை பத்தி புட்டு புட்டு வக்கிறாங்க. விஜய் ஒரு கார்ப்பரேட் மான்ஸ்டராம். எந்த நாட்டுக்கு போனாலும் எதிரியை அழிச்சுட்டு தான் மறுவேளை பாப்பாராம்.

அடுத்து கிளப்புகுள்ள விஜய் நடந்துபோக, பின்னாடி ஆங்கிள்ல காட்டுறாங்க. ஹீரோ என்ட்ரிலபா முகத்த ஸ்ட்ரெட்டா காட்டுன மாஸ் குறைச்சிடும்ல…

நெக்ஸ்ட் தனி ஏரோபிளேன்ல இந்தியா வந்து ஹெத்தா இறங்குறாரு விஜய். பின்னாடியே ஹைஹீல்ஸ் போட்ட, மியா ஃகலிபா தங்கச்சி மாதிரி ஒரு வெள்ளகார பிகரு இறங்குது. விஜய் பி.ஏ. போல. அப்புறம் ஒரு செக்கியுரிட்டி.. வயர்லெஸ் வச்சிட்டு பின்னாடியே வாராப்ள.

திரும்ப கிளப். பின்பக்கமா காட்டுனாங்களே அதே கிளப் தான். அங்க ஒரு சாக்லேட் ஹேர் வச்சிருக்க ஒரு பொண்ணு, கைய புடிச்சிட்டு இழுத்து, நானும் பிளே பாய் தான் பாத்துகோன்னு பேன்ஸ்கு கை காட்டுறாரு விஜய். அப்போ தளபதி விஜய்னு டைட்டில் கார்டு போட்றாங்க.

திரும்ப ஏர்போர்ட். ஏர்போர்ட்ல இருந்து வெளிய வர விஜய்யை, பணத்த எடுத்துட்டு ஓடிப்போன விஜய் மல்லையா தான் திரும்பி வந்துட்டாரோனு, மீடியா வழி மறைக்க. அந்த மீடியாவ விஜய் செக்யுரிட்டி மறைக்க.

எந்த கேமராவும் விஜய்ய போகஸ் பண்ணாம இருக்க, நான் பணம் அடிச்சிட்டுபோன விஜய் மல்லையா இல்ல. நா ஓட்டு போட தான் வந்தேன்னு விஜய் பேச, பக்கத்துல இருக்க செக்யுரிட்டி அரைகுறை ஜாக்கெட் போட்டு வந்த மீடியா பொண்ண குரு குருன்னு பாத்துட்டு இருக்கான்.

அடுத்து எலெக்சன் பூத். மியா ஃகலீபா தங்கச்சி கூட உள்ள என்ட்ரி குடுக்குறாரு விஜய். அடுத்த விரல்ல மை வைக்கற ஷாட். பூத் ஆபிசர் கோனைய மை வச்சி விடுறாரு ஒரு அம்மாவுக்கு. பூத்லயும் விஜய் பின்னாடியே… மீடியா அலையுது.

மீடியாவ பாத்ததும், அஜித் மாதிரி லைன்ல நின்னு தான் ஓட்டு போடா போவேன்னு சீன் போட்டு நல்ல பேரு கிரியேட் பண்ணுறாரு விஜய். அப்போ ஹீரோயின் என்ட்ரி. பூத் சிலிப் குடுக்குற நம்ம ஹீரோயின் ஹீரோவ பாக்க, ஹீரோவுக்கு காதல் பத்திக்குது.

அப்போ விஜய் பக்கம் இருக்க ஒரு பொண்ணு, நடிக்க வந்தோம்கிறத கூட மறந்துட்டு விஜய்ய முருகதாசுக்கே தெரியாம, கைல மறச்சு வச்சிருக்க மொபைல் போன்ல வீடியோ எடுக்குது. பாத்துப்பா ரிலீஸ்கு முன்னாடி சீன்ஸ் லீக் ஆயிட போகுது..

இதுக்கு இடைல நம்ம சிம்டங்காரன் சங்க வேற சைலன்ட காட்டி ஹார்ட் பீட் ஏத்துராறு எடிட்டர். அந்த பாட்டு மட்டுமா, சும்மிங் பூல்ல ஒரு குத்து டான்ஸ், செட்டு போட்டு கிளுகிளு பொண்ணுங்க கூட விஜய் டான்ஸ் ஆடுற இன்னொரு பாட்டு.

அப்புறம் காருக்குள்ள பாரின் பிகருங்க கூட ஒரே குஜால். நான் மெய்யாலுமே பிளே பாய் தான்பா மீண்டும் ஒருமுறை சொல்லாம சொல்லுரு விஜய்.

அப்புறம் ஒரு பைட் சீன் வேற. பாஞ்சு வந்த பத்து பேர போட்டு அடிச்சு படுக்க வச்சுட்டு. ஒருத்தன முட்டு வாயிலேயே, முட்டிய வச்சு தட்ட, கோடரியோட வந்த ரெண்டு பேரு, அத பாத்து ரெண்டு ஸ்டேப் பின்னாடி போக, கண்ணாலேயே மிரட்டுறாரு விஜய்.

திரும்ப பூத். ரொம்ப நேரமா லைன்ல நின்னு, ஹீரோயின சைட் அடிச்சி கரெக்ட் பண்ணிட்டு, ஓட்டுபோட பூத் உள்ள போன விஜய்க்கு ஒரே அதிர்ச்சி. ஏன்னா அவரோட ஓட்ட வேற யாரோ போட்டுட்டாங்க.

கைல ஒழுங்கா மை வக்கதா ஆபிசர் எல்லாம் இருந்தா இப்டிதான், வேற ஒருத்தன் கள்ள ஓட்டு போடுவான். பரிதாபம வெளில வர விஜய்ய பாத்ததும் கீர்த்தி சுரேசுக்கு பீல் ஆயிட்டாப்ல.

பாவம், மியா ஃகலிபா தங்கச்சிய காணோம். அதான்பா விஜய் பிஏ. கீர்த்தி சுரேஷ் சைட் அடிகிறப்பவே, இடைஞ்சல இருக்குனு மண்டைல தட்டி பாதிலேயே விரட்டி விட்டுடாரு போல.

நெக்ஸ்ட் ராதா ரவி என்ட்ரி. கீர்த்தி கூட ரெமான்ஸ் மூட்ல போற விஜய்யை, கோணவாய காட்டி வம்புக்கு இழுக்குறாரு விஜய்.

அடுத்து பாலத்துக்கு கீழ ஒரு பைட்டு. சும்மா எர்ல பறக்க விட்டுடே வாய்ல பபுள் காம் போடுறாரு விஜய். சந்திரமுகி படத்துல தலைவர் ஆரமிச்சு வச்சது. விஜய் விட்ற மாதிரி தெரில. எல்லாபடத்துலவும் பப்புள்காம் சீன்ன வச்சே ஓட்டுறாரு.

அடுத்து முதல்வன் அர்ஜுன் மாதிரி, ஒரே நாள்ல எல்லாத்தையும் மாத்துறேன்னு மக்கள் முன்னால கைய தூக்கி காட்டு வசனம் பேசுறாரு.

நெக்ஸ்ட்… ஐ எம் ஏ கார்பரேட் கிரிமினல்னு விஜய் டயலாக். வரலட்சுமி கிட்ட சொல்லுற சீன். அதான் அந்த அம்மாவே… டீசர் அரம்பிக்ரச்சே உங்கள பத்தி புட்டு வச்சிருச்சே…

ஏம்பா கத்தி படத்துல கார்பரேட் எதித்து போராடுனாரு. இப்போ கார்பரேட்ட இருந்துட்டே போராடுடாறு. கார்பரேட் நல்லவங்க இல்லன்னு சொல்லிட்டு, இப்போ நானே கார்பரெட் கிரிமினல்னு வசனம் பேசுறாரு..

அடுத்து பைக்க ஸ்டார்ட் பண்ணி கெல்மெட் எல்லாம் போட்டு, சாலை விதிய மதிச்சு வண்டிய ஓட்டுறாரு. கெல்மெட் போட்டலும், விஜய, கூட்டத்தோட கூட்டமா வச்சு போலீஸ் வெளுக்க, வலிக்காத மாதிரி அக்ரோசமா கத்துறாரு விஜய்.

அதுக்கு இடையில கண்டயினர் நிறைய பணம், அத போலீஸ் புடிக்குற சீன். எடிட்டர் ஒரு சீனாவது ஒழுங்கா காட்டியா. நோலன் படம் மாதிரியே டீசர்ல சீன மாத்தி மாத்தி போட்டு குழப்புற.

நெக்ஸ்ட் சீன், கண்ண மூடிட்டு ட்ரைவர் கார ஓட்ட, லாரி நச்சுனு அடிச்சு பறக்க விடுது. நெக்ஸ்ட் மழைல போராட்டம் பண்ணுற சீன்ல ஒரு குத்தாட்டம்.

அடுத்து கலெக்டர் ஆபிஸ்ல ஒரு குடும்பம் தீக்குளிக்குது. ஏன்பா… அத ஸ்லோ மோஷன்ல பாத்தா, எனக்கு சுடலையே…. அப்டினு ஜாலியா நிக்குற மாதிரியே இருக்கு. நல்லா நடிக்கிற ஆள போடமாடிங்களா. எமோஷன் கம்மியா இருக்குல, பின்ன எப்டி பேமிலி ஆடியன்ஸ் வருவாங்க…

திரும்ப அந்த ஹெல்மெட் போட்டு, வண்டி ஒட்டி அடி வாங்குனதுக்கு அடுத்த சீன். போலீஸ் கடவாய்லையே குத்தி, கண்ணு வாய், முகம்லாம் வீங்கிபோச்சு.

பரிதாபம பழ.கருப்பையா பேனர பாக்குறாரு. அவரு தான் அடிச்சு தொவச்சதா. நெக்ஸ்ட் பல கருப்பையா என்ட்ரி. அடுத்து யாரோ ஒருத்தர ஒரு பேக்ல பொட்டலம் போல பார்சல் பண்ணி வச்சிருக்காங்க. பழ.கருப்பையா நீங்க நல்லவரா? கெட்டவரா? சன்பன்சா இருக்கே.

நெக்ஸ்ட் சட்டசபை மாதிரி ஒரு இடம். அதான் ஏற்கனவே சொன்னனே, பத்து பேரு… கோடரி பைட்டு அந்த சீன்னோட என்ட்ரி. ஜிக்ஜாக்கா எடிட்டிங் திறமைய காட்டுறாராம் எடிட்டர்.

நெஸ்ட் மழைல குத்தாட்டம் போட்ட சீனுக்கு முன்ன அங்க ஏதோ ஒரு போராட்டம் நடந்திருக்கும் போல. 24 மணி நேரமும் விஜய் பின்னாடி இருந்த மீடியா, அப்போ மட்டும் இல்ல.

அதனால பேஸ்புக், ட்விட்டர்ல லைவ் போட்டு நேசனல் மீடியால இருந்து, லோக்கல் சேனல் வரை எல்லாரையும் அலறி அடிச்சுட்டு வர வரைக்கும், காது ஜவ்வு கிழிய கிழிய லைவ் போடுறாரு விஜய்.

இப்போ தான்பா படத்தோட டைட்டில் போடுறாங்க. கெட் ரெடி போர்ஸ்னு ஒரு வசனம். அதான் எந்திரன்ல ரஜினி சொல்லுற டயலாக். தீபாவளி சென்டிமென்ட்டா சன்பிக்சர் வக்க சொல்லிருப்பாங்க போல.

அடுத்த உங்க ஊரு தலைவன தேடி நீங்க… அப்டின்னு மக்கள பாத்து விஜய் சொல்ல… அந்த தலைவனே நீதான்பானு மக்கள் விஜய் பின்னாடி போக… அடடா 50 வருட தமிழ்சினிமாவின் பாரம்பரிய காட்சி.

வேற லாங்குவேஜ் படத்துல எதுவும் சீன் கிடைக்கலை போல. உள்ளூர் படத்துலவே கை வச்சிட்டாரு முருகதாஸ்.

நெக்ஸ்ட்… இது நம்ம சர்கார்… அப்படினு வெறித்தனமா படத்தோட டைட்டில சொல்லி லாஜிக் மிஸ்டேக் வரமா சரி பண்ணிட்டாரு விஜய். இனிமே எவனது ஏன் சர்காருனு பேரு வச்சிங்கனு கேப்பிங்க. மோடி சர்கார் மாதிரி, இது விஜய் சர்கார்.

அடுத்து எண்டு டைட்டில். அதோட முடிக்கள. இருங்க… போயிடாதிங்க… அந்த பாலத்துக்கு கீழ பைட் வச்சதுல, இன்னும் ஒருத்தன் உயிரோட இருக்கான் போல. அவன அப்டி பாகுபலி பிரபாஸ் மாதிரி அளக்க தூக்கி, சொலட்டி அடிக்குறாரு விஜய்.

திஸ் தீபாவளின்னு போட்டு ஒரு வழியா டீசர முடிச்சிட்டாரு எடிட்டரு.

Previous articleMovie Review Sandakozhi 2 | சண்டக்கோழி 2 திரைவிமர்சனம்
Next articleSindhu Jayakumar Exclusive Story and Photos
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here