Home சினிமா கோலிவுட் ஷாலினியின் முதல் காதல் அஜித் அல்ல! 2000-ல் வெளிவந்த பத்திரிக்கை செய்தி

ஷாலினியின் முதல் காதல் அஜித் அல்ல! 2000-ல் வெளிவந்த பத்திரிக்கை செய்தி

1138
0

shalini first love: ஷாலினியின் முதல் காதல் அஜித் அல்ல இப்படி ஒரு தலைப்பில் தான் 2000-ஆம் ஆண்டு ஒரு பத்திரிக்கையின் அட்டைப்படம் இருந்தது.

சினிமா செய்திகள் என்றால் அப்போது அந்த பத்திரிக்கை தான் நம்மர் ஒன். கிசு கிசு படிக்க, நடுபக்க ஸ்டில் பார்பதற்கு என்றே அந்த பத்திரிக்கையை வாங்க ஒரு கூட்டம் அலைமோதும்.

2000-ஆம் ஆண்டு தான் அஜித்-ஷாலினி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திடீரென இந்த பத்திரிக்கை இப்படி ஒரு செய்தியை வெளியிட்டது.

தமிழ் சினிமா முழுவதுமே ஒரு பரபரப்பு தான். shalini first love பற்றி அறிந்து கொள்ள எல்லோரும் ஆவலுடன் அந்த பத்திரிக்கையை வாங்கி படித்தனர்.

ஷாலினியின் முதல் காதலர் யாராக இருக்கும் என அனைவருக்குமே அறிந்துகொள்ள ஒரு ஆவல். வாங்கி படித்தபிறகு தான் பலருக்கும் புரிந்தது அவர் சினிமாவை அளவுக்கு அதிகமாகக் காதலித்தார் என்பது.

திருமணத்திற்கு பின் அஜித் ஷாலினியை நடிக்க கூடாது எனக் கூறியதாக அந்த நேரத்தில் பரபரப்பாகவும் பேசப்பட்டது.

இந்த செய்திக்குப் பிறகு ஷாலினியை நடிகர் அஜித் நடிக்க விடாமல் செய்வது தவறு என கோடம்பாக்கம் டீக்கடை பெஞ்ச் டாப்பிக்கா அமைந்தது.

திருமணத்திற்கு பிறகு வெளிவந்த அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் படத்திலும் கூட சில காட்சிகள் முடிவையாமல் இருந்தபோது அஜித் அந்த படங்களை வெளிவரவிடாமல் செய்ய முயற்சித்ததாகவும் கூட செய்திகள் வெளிவந்தது.

ஆனால், அதன் பிறகு ஷாலினியே அதற்கு மறுப்பு தெரிவித்தார். நடிக்க கூடாது என நானே எடுத்த முடிவு. அஜித் என்னை கட்டாயப்படுத்தவில்லை எனக் கூறினார்.

திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா கூட நடிக்க வந்து விட்டார். அதுபோல் நடிகை ஷாலினியும் தனக்கு என ஒரு கோட்டை கட்டி வைத்து இருந்தார்.

ஷாலினியே நடிக்க கூடாது என முடிவு எடுத்து இருந்தாலும், நடிகர் அஜித் மீண்டும் அவரை நடிக்க வைக்க முயற்சி செய்ய வேண்டும் என்பதே பலரின் விருப்பம்.

நடிப்புக்கு ஏது வயது? எந்த வயதிலும் நடிகராகலாம் என்பதே சினிமாவின் எழுதப்படாத விதி. இப்போதும் கூட ஷாலினிக்கு கோலிவுட் கதவு திறந்தே உள்ளது. கதவிற்குள் நுழையும் முடிவை அவர் தான் எடுக்க வேண்டும்.

Previous articleஜோதிகா கோவில் குறித்து அப்படி என்ன பேசினார்? முழு வீடியோ
Next articleajith mass movie scene – இதில் உங்களுக்கு பிடிச்ச சீன் எது என கமெண்ட் செய்யவும்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here