வேலையில், பிஸியாக இருக்கும் மனைவி ஷில்பா ஷெட்டிக்கு முத்தம் கொடுக்க முயற்சித்த அவரது கணவர் ராஜ் குந்த்ராவை புரட்டி எடுக்கும் ஷில்பாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முத்தம் கொடுக்க முயற்சித்த கணவருக்கு தர்ம அடி கொடுக்கும் நடிகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் பலரும் தங்களது அன்றாட வேலைகளை வீடியோகாவும், புகைப்படமாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
குடும்பத்தோடு நேரம் செலவழிப்பது, ரசிகர்களுடன் உரையாடுவது, சமையல், வீட்டு வேலை செய்வது, துணி துவைப்பது என்று பிஸியாக இருக்கின்றனர்.
அந்த வகையில், நடிகை ஷில்பா ஷெட்டியும் தனது குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு வருகிறார். அண்மையில், ஷில்பா ஷெட்டியின் யோகா வீடியோ வைரலானது.
இந்த நிலையில், ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், கணவர் ராஜ் குந்த்ரா மற்றும் பணிப்பெண் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
அந்த வீடியோவில், ஷில்பா அலமாரியில் துணிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவரது கணவர் ராஜ் குந்த்ரா அவருக்கு முத்தம் கொடுக்க முயற்சிக்கிறார்.
அதற்கு தான் வேலையில் பிஸியாக இருக்கும் போது முத்தமிடக் கூடாது என்று அவரது கணவரை திட்டுகிறார்.
அப்போது, வீட்டை சுத்தம் செய்யும் பணிப்பெண் வந்து, வேலை செய்யும் போது முத்தமிடக்கூடாது என கெஞ்சினாலும், விட மாட்டேங்கிறார், புரிய வையுங்கள் என்று அந்த பணிப்பெண் ஷில்பாவிடம் கூறுகிறார்.
இதையடுத்து கோபமடைந்த ஷில்பா, தனது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு தர்ம அடி கொடுத்து புரட்டி எடுக்கிறார். இந்த வீடியோவை ஷில்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.