Home சினிமா கோலிவுட் ஓகே ஆன சிம்பு – மிஷ்கின் கூட்டணி: லாக்டவுனுக்குப் பிறகு படப்பிடிப்பு!

ஓகே ஆன சிம்பு – மிஷ்கின் கூட்டணி: லாக்டவுனுக்குப் பிறகு படப்பிடிப்பு!

338
0
Simbu Join with Mysskin

Simbu Next Movie; ஓகே ஆன சிம்பு – மிஷ்கின் கூட்டணி: லாக்டவுனுக்குப் பிறகு படப்பிடிப்பு! விஷாலுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து மிஷ்கின் தற்போது சிம்பு உடன் இணைந்துள்ளார். இந்த கூட்டணியில் லாக்டவுன் முடிந்த பிறகு புதிய படம் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

சிம்பு – மிஷ்கின் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் மே 4 ஆம் தேதிக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்குவது பற்றி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் துப்பறிவாளன் 2 படத்தில் நடித்து வந்தார். ஆனால், படப்பிடிப்பு பாதி முடிவடைந்த நிலையில், விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மிஷ்கின் துப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகினார்.

இதையடுத்து துப்பறிவாளன் 2 படத்தை விஷாலே இயக்கி வருகிறார். இப்படத்திற்கு பிறகு மிஷ்கின் என்ன செய்யப்போகிறார்? என்ற கேள்வி எழுந்தது.

அதற்கு சிம்பு விடை கொடுத்துவிட்டார். ஆம், சிம்பு – மிஷ்கின் கூட்டணியில் புதிய படம் உருவாக இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே சிம்பு – மிஷ்கின் கூட்டணி இணைவதாக கூறப்பட்டது. தற்போது இப்போது தான் அதற்கு நேரம் வந்திருக்கு.

சிம்புவிடம் கதை சொல்லியிருக்கிறாராம் மிஷ்கின். இந்த கதை சிம்புவிற்கு பிடித்துப் போக அவரும் ஓகே சொல்லியிருக்கிறார்.

அதனால், புதிய படம் ஓகே ஆகியிருக்கிறது. இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்திருக்கிறதாம்.

இதற்கு முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வந்த யுத்தம் செய் என்ற படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரொனா லாக்டவுன் முடிவுக்கு வந்ததும், படப்பிடிப்பைத் தொடங்க இருக்கிறதாம்.

தற்போது சிம்பு மாநாடு படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு மிஷ்கின் படம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleரூ.43,574 கோடிக்கு ரிலையன்ஸ் ஜியோவின் 9.9% பங்குகளை பேஸ்புக் வாங்கியது
Next articleWorld Book Day 2020 Theme; உலக புத்தக தினம் 2020 தீம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here