Home சினிமா கோலிவுட் சமையல் கலை வல்லுநராகும் சிம்பு: லாக்டவுனில் விதவிதமான சாப்பாடு!

சமையல் கலை வல்லுநராகும் சிம்பு: லாக்டவுனில் விதவிதமான சாப்பாடு!

411
0
Silambarasan TR

Simbu Cooing; சமையல் கலை வல்லுநராகும் சிம்பு: லாக்டவுனில் விதவிதமான சாப்பாடு! கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் சிம்பு, தனது அப்பா, அம்மாவிற்காக விதவிதமாக சமையல் செய்து அசத்தியிருக்கிறாராம்.

லாக்டவுனை சரியாக பயன்படுத்திக் கொண்ட சிம்பு விதவிதமாக சமையல் செய்து பெற்றோரை அசத்தியிருக்கிறாராம்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரொனா காரணமாக, வரும் 17 ஆம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு மேலும், நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. லாக்டவுனுக்கான புதிய வழிமுறைகள் குறித்து 18 ஆம் தேதிக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் பலரும் சமையல் கற்றுக்கொண்டுள்ளனர். அவர்களில் காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா, நிவேதா பெத்துராஜ் ஆகியோரை குறிப்பிடலாம்.

நடிகர்களில் சமையல் கலையில் வித்தகர் தல அஜித். இவரது பிரியாணி வாசனையும், ருசியையும் அதை சாப்பிட்டவர்களால் இன்றும் மறக்க முடியாது.

அதை நினைத்தால் இன்றும் அவர்களது நாவினில் எச்சில் ஊறும். அத்தனை ருசி! ஆர்யா, விஷால், சூரி ஆகியோருக்கும் நன்றாகவே சமைக்க தெரியுமாம்.

இந்தப் பட்டியலில் தற்போது நடிகர் சிம்புவும் சேர்ந்துள்ளாராம். ஆம், இவருக்கும் ருசியாக சமைக்க வருமாம்.

கொரோனா லாக்டவுனில் வீட்டிலேயே இருக்கும் சிம்பு அப்பா டி ராஜேந்தருக்கும், அம்மா உஷா ராஜேந்தருக்கும் விதவிதமாக வகை வகையாக சமையல் செய்து கொடுத்து அசத்தியிருக்கிறார். இதில், சைவம், அசைவம் இரண்டும் அடங்கும்.

அந்த வகையில், சிம்புவின் வருங்கால மனைவி மிகவும் கொடுத்து வைத்தவர் என்று அவரது நண்பர்கள் கூறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleபுதிய சாதனை படைத்த தல அஜித்தின் அப்பா மகள் பாடல் கண்ணான கண்ணே லிரிக் வீடியோ!
Next articleநான் கைது செய்யப்பட்டேனா? அன்று மட்டும் 3 படம் பார்த்தேன்: பூனம் பாண்டே விளக்கம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here