Home சினிமா கோலிவுட் அப்படி போடு: சிம்புக்கு கல்யாணம்: அதுவும் கோடீஸ்வர பெண்?

அப்படி போடு: சிம்புக்கு கல்யாணம்: அதுவும் கோடீஸ்வர பெண்?

290
0
Simbu Marriage

Simbu Marriage; அப்படி போடு: சிம்புக்கு கல்யாணம்: அதுவும் கோடீஸ்வர பெண்! கொரோனா பிரச்சனை முடிவுக்கு வந்ததும் சிம்புவுக்கும் அவரது தூரத்து உறவுக்கான பெண்ணான கோடீஸ்வர வீட்டு பெண்ணுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவுக்கும், கோடீஸ்வர வீட்டு பெண்ணிற்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரவாக இருப்பவர் சிம்பு. தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

வி ஹவுஸ் புரோடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரிக்கிறார். சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷினியும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர். மேலும், மனோஜ், டேனியல், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் பலரும் நடிக்கின்றனர்.

அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக சிம்பு இந்தப் படத்தில் நடிக்கிறார். சென்னையில் நடந்து வந்த படப்பிடிப்பைத் தொடர்ந்து, 2ம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது.

ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. படக்குழுவினரும் சென்னை திரும்பினர்.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சிம்பு மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பேசிய வீடியோ வெளியானது.

இதையடுத்து, விரைவில், சிம்புவின் திருமணம் நடக்கும், உங்களைப் போன்று நானும், சிம்புவின் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறியிருந்தார்.

ஏற்கனவே சிம்புவிற்கும், லண்டனைச் சேர்ந்த கோடீஸ்வர வீட்டு பெண்ணிற்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சிம்பு திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண், அவருக்கு தூரத்து உறவுக்குக்கார பெண் என்றும் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் பிரச்சனை முடிந்த பிறகு சிம்புவின் திருமணம் நடைபெறும் என்று செய்தி வெளியாகி வருகிறது.

இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு சிம்புவிற்கும், அவரது உறவுக்கார பெண்ணுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது என்று செய்தி வெளியானது. அப்போது சிம்பு அதனை மறுத்தார்.

எனக்கு திருமணம் என்று முடிவு செய்யப்பட்டால் நானே அதனை முறையாக அறிவிப்பேன் என்றும் கூறினார். இதையடுத்து, தற்போது மீண்டும் சிம்புவின் திருமணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleகொரோனா பாதிப்பில் 5-ம் இடத்தில் இந்தியா
Next articleதிருப்பதி மலை பற்றி சர்ச்சை பேச்சு: சிவகுமார் மீது வழக்குப்பதிவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here